பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்

பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம்
X

Coimbatore News- சாலையில் ஏற்பட்ட பள்ளம்

Coimbatore News- பொள்ளாச்சி பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி நகரப் பகுதியில் மத்திய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பொள்ளாச்சி நகராட்சியின் பிரதான குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குழாயானது தேசிய நெடுஞ்சாலையில் மையத்தில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் திடீரென ஏற்பட்ட குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பல லட்சம் குடிநீர் வீணானது. அதனை சரி செய்த நகராட்சி ஊழியர்கள் பின்னர், அப்பகுதிக்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது சாலையின் மையத்தில் பெரிய குகை போன்ற பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை உடனடியாக போக்குவரத்து காவல்துறையினர் தடுப்பு வைத்து தடுத்து வாகனங்களை ஓரமாக செல்லும்படி அறிவித்தனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் முன்பு நெடுஞ்சாலை துறையால் ரவுண்டானா அமைக்கப்பட்டது. தற்போது இந்த குடிநீர் குழாய் உடைந்ததால் அந்த ரவுண்டானா பகுதியும் பிளவுகள் ஏற்பட்டு மண்ணுக்குள் புதையும் நிலையில் உள்ளது. அதனைச் சுற்றி வெடிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் பொள்ளாச்சியில் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. உடனடியாக இதனை சரி செய்ய வேண்டுமென பொதுமக்களும் சமூக ஆர்வலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil