பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு

பொள்ளாச்சியில் தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு
X

பொள்ளாச்சி தனியார் பள்ளி வாகனங்களை  சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சியில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களை சார் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

ஆண்டுதோறும் பள்ளிகளில் கோடை விடுமுறை நாட்களில் தனியார் பள்ளிகளில் உள்ள வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்வது வழக்கம். அதன்படி இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் இயக்கப்படும் 372 வாகனங்களை இன்று ஆய்வு செய்யப்பட்டது. பொள்ளாச்சி ஊஞ்சலம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி காவல் துறை துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி வாகனங்களின் ஓட்டுநர்களிடம் முறையான ஓட்டுநர் உரிமம் இருக்கிறதா, வேகக் கட்டுப்பாட்டு கருவி செயல்படுகிறதா, அவசர கால வழிகள் முறையாக அமைக்கப்பட்டுள்ளதா, பள்ளி மாணவர்கள் ஏறுவதற்கான படிகள் சரியான உயரத்தில் உள்ளதா, மருத்துவ உபகரணங்கள் இருக்கிறதா என்பது போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

மேலும் திடீரென பள்ளி வாகனங்களில் தீ பிடித்தால் உடனடியாக தீயை அணைப்பது குறித்து பொள்ளாச்சி தீயணைப்பு துறை சார்பில் செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. அரசு உத்தரவுப்படி பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளது என்றும், போக்குவரத்து விதி மூலம் வாகனங்கள் இயக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அந்த வாகனங்கள் இயக்க தடை செய்யப்பட்டு அதை மீண்டும் சரி செய்த பின்னரே இயக்க அனுமதிக்கப்படும் என்றும் ஆய்வு செய்த பின்னர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்திரின் சரண்யா தெரிவித்தார். இதேபோல மற்ற பள்ளிகளின் வாகனங்களிலும் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!