பொள்ளாச்சியில் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கடை அடைப்பு போராட்டம்
கடையடைப்பு போராட்டம்
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஏராளமான வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள், உணவகங்கள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தில் 1971 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட விதிகளின்படி, 5 வருடங்களுக்கு ஒரு முறை மறுசீராய்வு செய்து வரி வசூல் செய்யப்படுகிறது.
அதன்படி நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்து வந்தனர். இதனிடையே நகரப் பகுதிகளில் விதிகளை மீறி கட்டிடங்கள் கட்டி உள்ளதாக தனி நபர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் விதிகளை மீறிய கட்டிடங்களை கண்டறிந்து சீல் வைக்க பொள்ளாச்சி நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனால் நகராட்சி அதிகாரிகள் வரி வசூல் செய்வதை நிறுத்திவிட்டு, விதி மீறிய கட்டிடங்களுக்கு சீல் வைத்து வந்தனர்.
இதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்து நகராட்சி அதிகாரிகளிடம் வணிகர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் நீதிமன்ற உத்தரவை தவிர்க்க முடியாது என்று கூறி கட்டிடங்களுக்கு சீல் வைக்கும் பணியை நகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். இதனால் கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் மிகவும் பாதிப்படைவதாக கூறி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று ஒரு நாள் காலை ஒன்பது மணி முதல் மாலை 5:00 மணி வரை கடை அடைப்பு போராட்டத்தில் செய்து, உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கடைவீதி உட்பட முக்கிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆனால் உண்னாவிரத போராட்டத்திற்கு காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu