மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு 20 ஆண்டு சிறை

மூன்றரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை:  முதியவருக்கு 20 ஆண்டு சிறை
X

முருகன்

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் முதியவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், அங்கு உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் 12 ம் தேதி அவர் வேலைக்கு செல்லும் போது, தனது 31/2 வயது பேத்தியையும் உடன் அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த சிறுமி மாடியில் விளையாடி கொண்டு இருந்த போது, அப்பெண் கீழே வீட்டு வேலை செய்து கொண்டு இருந்தார். அப்போது வீட்டு உரிமையாளரான மாக்கினாம்பட்டியை சேர்ந்த முன்னாள் மின் ஊழியர் முருகன் (78) என்பவர் சிறுமியை அறைக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

இதனால் வலி தாங்காமல் கதறிய சிறுமியின் அழுகுரல் கேட்டு ஓடி வந்த அவரது பாட்டி சிறுமியை முதியவரிடம் இருந்து மீட்டார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரில் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் முருகனை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் இறுதி விசாரணை அண்மையில் முடிந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் குற்றம் சாட்டப்பட்ட முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீட்டு தொகை வழங்கவும் உத்தரவிட்டார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!