ஆனைமலை அருகே தரைப்பாலம் கட்டும் பணியால் விபத்து அபாயம்

ஆனைமலை அருகே தரைப்பாலம் கட்டும் பணியால் விபத்து அபாயம்
X

கோப்புப்படம் 

ஆனைமலை-வேட்டைக்காரன்புதூர் சாலையில் நடைபெறும் தரைப்பாலம் கட்டும் பணி காரணமாக விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க கோரிக்கை.

ஆனைமலை மாசாணியம்மன் கோவில், பரம்பிக்குளம், டாப்சிலிப், ஆழியார், அழுக்கு சாமியார் கோவில் உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளுக்கு வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வாகனங்களில் வருகின்றனர்.

இந்நிலையில் ஆனைமலை -வேட்டைக்காரன் புதூர் செல்லும் சாலையில் கடந்த ஒரு வார காலமாக தரைப்பாலத்தை இடித்து அகற்றிவிட்டு புதிதாக தரைப்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தரைப்பாலம் அமைப்பதற்காக சாலையில் ஒருபுறம் பள்ளம் தோண்டி பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். போக்குவரத்து நெரிசல் மிகுந்த நேரங்களில் சாலைப்பணி மேற்கொள்ளப்படுவதால் ஒவ்வொரு வாகனமும் குறைந்தது 15 நிமிடங்கள் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது...

மேலும் பாலம் கட்டும் பணியும் மந்தமாக நடைபெற்று வருகிறது. இதனால் அந்த சாலையில் அடிக்கடி வாகன விபத்துகள் நடக்கிறது. இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், 7 அடிக்கு இருந்த தரைத்தளத்தை 15 அடிக்கு விரிவுபடுத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சாலையில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டு வாகனங்கள் ஒரு புறம் மட்டுமே செல்ல அனுமதிக்கப்படுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மேலும் பாலம் கட்டுவதற்கும் காலதாமதம் ஏற்படுகிறது. இங்கு ஒருபுறம் தோண்டி 15 நாள் வேலை செய்கின்றனர். மற்றொருபுறம் தோண்டி 15 நாட்கள் வேலை செய்கின்றனர். எனவே வாகனங்களை இவ் வழியாக அனுமதிப்பதை நிறுத்திவிட்டு வானங்களை மாற்றுப்பாதை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

Tags

Next Story
சிறுநீரகத்துல நச்சுக்கள் இருக்கா ?..உடனே வெளியேற்ற இந்த சில பழங்கள சாப்டுங்க..!| Best fruits for kidney cleansing naturally in tamil