நரிக்குறவர் காலனியில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டம்

நரிக்குறவர் காலனியில் குடிநீர் வழங்காததை கண்டித்து போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் 

3 மாதங்களாக தங்களது காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என போராட்டம் நடத்தினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள குள்ளக்காபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட நரிக்குறவர் காலனியில் வசித்து வருபவர் பிரபுதேவா. இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 3 மாதங்களாக தங்களது காலனியில் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி இருசக்கர வாகனத்தை நிறுத்தி, தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் .

தங்கள் காலனிக்கு மூன்று மாதங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனவும், ஊராட்சி மன்ற தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளுக்கு பணம், காடை, முயல் ஆகியவை கொடுத்தும் இதுவரை தண்ணீர் விநியோகம் செய்யவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் குழந்தைகள் முதல் வயதான முதியவர் வரை மிகுந்த பாதிப்புக்குள்ளாகின்றனர் எனவும், ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம் எனவும் அவர் கூறினார். மேலும் குடிநீர் வழங்காததை கண்டித்து அவர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் அங்கு வந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!