பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா சோதனை ஓட்டம் ரத்து

பொள்ளாச்சியில் சர்வதேச பலூன் திருவிழா சோதனை ஓட்டம் ரத்து
X

Coimbatore News- பொள்ளாச்சியில் பலூன் திருவிழா சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது.

Coimbatore News- பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டதால் சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இந்த பலூன் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது.

பொள்ளாச்சியின் அழகை கண்டு கண்டு ரசிக்கவும், சுற்றுலா தளத்தை மேம்படுத்தவும் சுற்றுலாத்துறை சார்பில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது. சர்வதேச பலூன் திருவிழாவைக் காண்பதற்கு ஏராளமான பார்வையாளர்கள் திரள்வது வழக்கம். வெவ்வேறு நாடுகளில் இருந்தும் வரவழைக்கப்படும் ராட்சத பலூன்களில் ஏறி பொதுமக்கள் பயணம் செய்ய முடியும். இந்த பலூன் திருவிழாவில் பிரான்ஸ், ஜெர்மன், நெதர்லேண்ட், பிரேசில் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பத்து வகையான பல பலூன்கள் பறக்க விடப்பட்டுள்ளது. காலை மற்றும் மாலை என இரு வேலைகளிலும் பலூன்கள் வானில் பறக்க விடப்படும். 60 அடி முதல் 100 அடி உயரம் கொண்ட இந்த பலூன்கள், பலூன்களுக்கு வெப்பகாற்று அடிக்கப்பட்டு மிக்கி மவுஸ், டைனோசர் உட்பட பல்வேறு வடிவங்களில் உள்ள பலூன்கள் உள்ளிட்டவை பறக்கப்பட உள்ளன. இந்த பலூன் திருவிழாவை பார்ப்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம்.

பொள்ளாச்சியில் இந்த ஆண்டு சுற்றுலா துறை சார்பில் பலூன் திருவிழா, நாளை துவங்க உள்ளது. இந்த ஆண்டிற்கான சர்வதேச பலூன் திருவிழா நாளை முதல் வருகின்ற 16ஆம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.

இதற்காக பிரான்ச், நெதர்லாந்து, ஸ்பெயின், தாய்லாந்து, ஜப்பான் உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பல்வேறு வண்ணங்களில் வடிவமைக்கப்பட்ட பலூன்கள் உடன் பைலட்கள் பொள்ளாச்சிக்கு வந்துள்ளனர். இந்த நிலையில் பலூன் திருவிழாவிற்காக சோதனை ஓட்டம் இன்று நடைபெற இருந்தது. இதற்கான பணிகள் எல்லாம் தயார் நிலையில் இருந்த நிலையில், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக இன்று நடைபெற இருந்த சோதனை ஓட்டம் ரத்து செய்யப்பட்டது. இதனால் சோதனை ஓட்டத்தை பார்க்க அதிகாலையில் வந்த பார்வையாளர்கள் ஏமாற்றத்தில் திரும்பி செய்தனர்.

Tags

Next Story
ai solutions for small business