பொள்ளாச்சி பகுதி வளர்ச்சிப்பணிகள்: மாவட்ட கலெக்டர் ஆய்வு
வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி வளர்ச்சி பகுதிகளை மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. அப்பணிகள் முன்னேற்ற நிலை குறித்து அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதனடிப்படையில், பொள்ளாச்சி நகராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 78 லட்சம் மதிப்பீட்டில் 48 கடைகள் கொண்ட மீன் மார்க்கெட் கட்டுமான பணிகள். நமக்கு நாமே திட்டத்தின் கீழ் நகராட்சி ஆண்கள், மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு மைதானத்தில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி.
ரூ. 148 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமான பணிகள், பொள்ளாச்சி கோயம்புத்தூர் சாலை சி. டி. சி மேடு, அருகே ரூ. 7 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu