பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
இஸ்லாமியர்களின் புனித நாளான ரமலான் பண்டிகை வருகிற 22ஆம் தேதி கொண்டாடப்படுகிறது ரமலான் பண்டிகையொட்டி இஸ்லாமியர்கள் நோன்பு இருந்து வருகின்றனர்
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் துவங்கி உள்ளது. ரம்ஜான், ரமலான் அழைப்படும் இந்த பண்டிகைரமலான் மாதம் முழுவதும் சூரிய உதயத்திற்கு முன் மற்றும் சூரிய மறைவிற்கு பிறகு மட்டும் உணவருந்தி விட்டு, பகல் பொழுதில் உணவு, தண்ணீர் ஆகியவற்றை தவிர்த்து 30 நாட்களும் நோன்பு கடைபிடிக்கப்படுவது வழக்கம்.
இஸ்லாமிய மக்களால் கொண்டாடப்படும் மிக முக்கியமான இரண்டு பண்டிகைளில் ஒன்று ரமலான் பண்டிகை. அந்த பண்டிகை கொண்டாடுவதற்கு முன் 29 அல்லது 30 நாட்கள் கொண்டப்படும் ரமளான் மாதம் முழுவதும் நோன்பிருந்து அதன் அடுத்த மாதமான ஷவ்வால் மாதத்தின் முதல் நாள் கொண்டாடப்படுவதுதான் நோன்பு பெருநாள் எனும் ஈகை திருநாள். இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான், இறைவனால் அருளப்பட்டது ரமலான் மாதத்தில் தான்.
இஸ்லாமியர்கள் கிட்டதட்ட ஒரு மாத காலம் ரமலான் நோன்பினை கடைபிடிப்பது வழக்கம். இஸ்லாமிய நாட்காட்டியின்படி ஒன்பதாவது மாதமான ரமலான் மாதத்தின் அனைத்து நாட்களிலும் காலை சூரிய உதயத்திற்கு முன்பே நோன்பினை துவங்கி விடுவார்கள். சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமலும், நீர் அருந்தாலும் நோன்பு கடைபிடிப்பார்கள்.அருள் நிறைந்த, புனிதமான ரமலான் மாதம் அல்லாஹ்வை அதிகம் நெருங்கும் வாய்ப்பை பெறுமா மாதமாகும். பிழைப்பொறுப்புத் தேடி, பாவங்களில் இருந்து காத்துக் கொள்ளும் மாதமாகும். நன்மைகள் அதிகம் செய்யும் மாதமாகவும் ரமலான் மாதம் கருதப்படுகிறது
இந்த நிலையில் நேற்று மாலை பொள்ளாச்சி பெரிய பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் திமுக மாநில தகவல் தொழில் நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் பொள்ளாச்சி நகர கழக செயலாளர் நவநீத கிருஷ்ணன் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu