பிரதமர் மோடி மூன்றாவது முறை பிரதமராவார் - பொள்ளாச்சி பாஜக வேட்பாளர்..!
வசந்த ராஜன் வேட்பு மனுத்தாக்கல்
பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வேட்பாளராக கே.வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இன்று வேட்பு மனு கடைசி நாள் என்பதால், பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் பாஜக கட்சி அலுவலகத்தை அவர் திறந்து வைத்தார். பின்னர் வேட்பாளர் வசந்த ராஜன் பாஜகவினர் உடன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக வந்தார்.
அப்போது அந்த அலுவலகத்தில் 200 மீட்டர் அளவில் போலீசார் தேர்தல் விதிமுறைப்படி தடுத்து நிறுத்தினர். பின்னர் வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளர் வசந்த ராஜன் மற்றும் கூட்டணி கட்சியினர் மட்டுமே சார் ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் கேத்தீரின் சரண்யாவிடம் பாஜக வேட்பாளர் வசந்த ராஜன் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.
பின் அவர் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் 400 இடங்களுக்கு மேல் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள். மீண்டும் பாரதப் பிரதமராக மூன்றாவது முறையாக பாரத பிரதமராக மோடி வருவார். பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். ரயில் நிலையம் உட்கட்டமைப்பு மற்றும் புதிய ரயில்கள் பொள்ளாச்சி வழியாக வர நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆனைமலை நல்லாறு திட்டம் விவசாயிகளுடன் கருதி செயல்படுத்தப்படும். வெள்ளலூர் குப்பை கிடங்கு பிரச்சனை சரி செய்யப்படும். ஆனைமலை புலிகள் காப்பகம் விலக்கு அளிக்கப்பட்டு, வால்பாறை, டாப்ஸ்லிப் சுற்றுலாத்தலமாக மேம்படுத்தப்படும். விவசாயிகளின் நீண்ட நாள் பிரச்சனைகள் குறிப்பாக தென்னை விவசாயிகள் தேங்காய் விலை வீழ்ச்சி, தென்னை நார் தொழில் நலிவு அடைந்துள்ளது. அதனால் பாரத் தேங்காய் எண்ணெய் என நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு கிடைக்க வழி வகுக்கப்படும் எனக் கூறி வாக்குறுதியாக அளித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu