பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சி அரசு  மருத்துவமனையில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட தேசிய தரச்சான்று மதிப்பீட்டுக்குழுவினர்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வெளி நோயாளிகளாகவும், மற்றும் 450 க்கும் மேற்பட்டவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மருத்துவமனையில் தேசிய தரச் சான்று ஆய்வுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்கு வங்கத்தை சேர்ந்த சுனையன் செளத்ரி தலைமையில் ஹரியானா, மேற்குவங்கம், கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நான்கு பேர் அடங்கிய குழுவினர் 7, 8, 9 ஆகிய மூன்று தினங்களுக்கு மருத்துவமனையில் உள்ள பிரசவ விடுதி, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் கவனிப்பு பிரிவு, அறுவை சிகிச்சை பிரிவு, உள்ளிட்ட 19 துறைகள், மருத்துவமனையில் சுகாதாரம், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் கருத்துக்களை கேட்டும் ஆய்வு செய்து வருகின்றனர்.

ஆய்வில், 70 மதிப்பெண்ணுடன் சான்று கிடைத்தால், மத்திய அரசு நிதி கிடைக்கும். பொள்ளாச்சி அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றளிப்பு தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளது. மாநில குழு ஆய்வறிக்கையின் அடிப்படையில், நேற்று ஹைதராபாத், டெல்லி, கேரளாவைச் சேர்ந்த மத்திய தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு வார்டாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வின் போது, நோயாளிகளிடம் சிகிச்சைக்கு பணம் பெறுகின்றனரா? சிகிச்சை முறையாக வழங்கப்படுகிறதா என கேட்டறிந்தனர். உதவியாளர்களிடம், அவசர சிகிச்சைக்கு வருபவர்கள், உடனடியாக சிகிச்சை தர வேண்டியவர்களை எங்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்பது குறித்து கேட்டு விளக்கம் பெற்றனர்.ஆய்வின் போது, மருத்துவமனை கண்காணிப்பாளர் கலைச்செல்வி, இருப்பிட மருத்துவ அலுவலர் ராஜா மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:

பொள்ளாச்சி, விருதுநகர், பெரம்பலுார் ஆகிய அரசு மருத்துவமனைகள் இந்தாண்டு தேசிய தரச்சான்றுக்கு தகுதி பெற்றுள்ளன. ஒவ்வொரு மருத்துவமனைக்கும் மூன்று பேர் கொண்ட குழு ஆய்வு செய்கிறது.பொள்ளாச்சியில், மூன்று பேர் கொண்ட குழு, மூன்று நாட்கள், ஒவ்வொரு துறையாக ஆய்வு செய்கின்றனர். முதல் நாளில், பொதுமக்களுக்கான வசதிகள், சிகிச்சை தரம், நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் முறை, சிகிச்சைக்கு பணம் கேட்கப்படுகிறதா என ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, அவசர சிகிச்சை பகுதி, பிரசவ வார்டு, பச்சிளம் குழந்தை, குழந்தை கட்டுப்பாட்டு மையம், உள் நோயாளி பகுதி, ஆய்வகங்கள், மருத்துவமனை சுகாதாரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.மருந்தகம், பிரசவ வார்டு, சவக்கிடங்கு, வெளிநோயாளிகள் வருகை, நிர்வாக செயல்பாடுகள், அவசர சிகிச்சை, அறுவை சிகிச்சை, குழந்தைகள் பகுதிகள் இன்று ஆய்வு செய்யப்படுகிறது.நாளை, ஆய்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது.

ஆய்வின் போது உள்ள குறைகள், நிறைகளை போட்டோ எடுத்தும் பதிவு செய்கின்றனர். ஒவ்வொரு துறையும், 70 மதிப்பெண் பெற வேண்டும். அதுமட்டுமின்றி, அரசு மருத்துவமனை மொத்தமாக, 70 மதிப்பெண் பெற வேண்டும்.தேசிய தரச்சான்றுக்கு தகுதி பெற்றால், ஒரு படுக்கைக்கு, 10 ஆயிரம் ரூபாய் வீதம், மொத்தம், 346 பெட்டுகளுக்கு, 34 லட்சத்து, 60 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். இதனை கொண்டு தேவையான வசதிகளை மேம்படுத்த முடியும்

Tags

Next Story