பொள்ளாச்சியில் வாக்களிக்க நூதன வரவேற்பளித்த அரசு அதிகாரிகள்..!
வெற்றிலை பாக்குடன் தேர்தல் அழைப்பிதழ் வழங்கிய அதிகாரிகள்
நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பு உள்ளிட்ட தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அப்போது மக்கள் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில், வாக்குப்பதிவை அதிகரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அப்பகுதிகளில் வீடு வீடாகச் சென்று நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலில் அவசியம் வாக்களிக்க கோரி, வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வாக்காளர்களை வாக்களிக்க வேண்டும் என அதிகாரிகள் அழைத்தனர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்தரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு வீடு வீடாக சென்று அழைப்பிதழ்களை அதிகாரிகளை வழங்கினர். மேலும் தேர்தலில் வாக்களிப்பது அவசியம் குறித்து கேஸ் சிலிண்டர், பேருந்துநிலையம், ரயில் நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகிய பகுதிகளின் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu