பொள்ளாச்சியில் கல்விக் கடன் வழங்கும் முகாம்
ககல்விக்கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையை வழங்கினார் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார்
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த கல்விக் கடன் வழங்கும் முகாமை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடக்கி வைத்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொள்ளாச்சி-உடுமலை ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மாணவ-மாணவிகள் உயர் கல்வி படிப்பதற்கு வசதியாக மாபெரும் கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நடைபெற்றது.
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தொடக்கி வைத்தார். பின்னர் அவர் முகாமில் மாணவ-மாணவிகளுக்கு ஏற்படுத்தப்பட்டு உள்ள வசதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கல்விக்கடன் வழங்குவதற்கான ஒப்புதல் ஆணையை வழங்கினார்.
இதில் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம், வால்பாறை ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் சப்-கலெக்டர் பிரியங்கா, தாசில்தார் ஜெயசித்ரா, நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பேசும் போது கூறியதாவது:- கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையை( 40 சதவீதம்) அதிகரித்த மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது. 12-ம் வகுப்பு படித்த ஒவ்வொரு மாணவரும் கல்லூரிக்கு செல்ல வேண்டும் என்பதற்காக நான் முதல்வன் உள்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கட்டணம் செலுத்த முடியாமல் கல்லூரிக்கு செல்ல முடியவில்லை என்று ஒரு மாணவர் கூட இருக்க கூடாது என்பதற்காக இந்த கல்வி கடன் முகாம் நடத்தப்படுகிறது. இதுபோன்று தொடர்ந்து முகாம் நடத்தப்படும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu