இ. எஸ். ஐ. மருந்தகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஆய்வு
பொள்ளாச்சியில் அமைந்துள்ள இ. எஸ். ஐ. மருந்தகத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சியில் அமைந்துள்ள இ. எஸ். ஐ. மருந்தகத்தை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி. வி. கணேசன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது மருத்துவர்கள் மருத்துவப் பணியாளர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரின் வருகை பதிவேடுகளையும் மருந்தகங்களின் செயல்பாடுகள் மற்றும் மருந்துகளின் இருப்பு குறித்தும் அவர் ஆய்வு செய்தார்.
மருத்துவ பரிசோதனை மற்றும் மருந்துகள் வாங்க வந்தவர்களிடம் அங்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் முறையாக மருந்துகள் வழங்கப்படுகிறதா? என்பது குறித்தும் கேட்டறிந்த சி. வி. கணேசன், மருந்தவமனைகளில் முறையான சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கவும் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா உட்பட பலர் இருந்தனர்.
தொழில் நிறுவனங்களில் குறைந்த சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் அவசர மருத்துவ சிகிச்சை பெற உதவுகிறது மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இ.எஸ்.ஐ.,). மாதம் ரூ.21 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவாக சம்பளம் பெறும் தொழிலாளர்கள் இதில் சந்தா செலுத்தி உறுப்பினராகும் பட்சத்தில் அவசர காலங்களில் அவரோ, அவரது குடும்பத்தினரோ இ.எஸ்.ஐ., மருத்துவ மனை அல்லது அதனுடன் ஒப்பந்தம் செய்துள்ள கார்ப்பரேட் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும்.
மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இ.எஸ்.ஐ., செயல்படுகிறது. தமிழகத்தில் சென்னையில் மண்டல அலுவலகம் செயல்படுகிறது. கோவை, சேலம், மதுரை, திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு நான்கு துணை மண்டலங்கள் செயல்படுகின்றன. பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை கொண்டு இயங்கும் தொழிற்சாலைகள்கட்டாயம் இ.எஸ்.ஐ., திட்டத்தில் இணைய வேண்டும்.தொழிலாளர்கள் தொழில்நிறுவனங்கள் மூலம்இத்திட்டத்தில் இணைந்து சந்தா செலுத்த வேண்டும். 0.75 தொழிலாளர்கள்,3.25 தொழில் நிறுவனத்தினர் என 4 சதவீதம் சந்தா செலுத்த வேண்டும். திட்டத்தில் நுழைந்த நாள் முதல்மருத்துவ உதவி பெறலாம். சிறப்பு மருத்துவ சிகிச்சை உதவி பெற குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் காப்பீடு திட்டத்தின் கீழ் இருக்க வேண்டும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu