/* */

திமுக நிர்வாகிகள் திருட்டுத்தன வேலைகள் செய்வார்கள்: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு

திமுகவினர் திருட்டுத்தனமான வேலைகள் செய்வார்கள் என எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

திமுக நிர்வாகிகள் திருட்டுத்தன வேலைகள் செய்வார்கள்: எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு
X

எஸ்.பி. வேலுமணி

பொள்ளாச்சி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கார்த்திகேயன் அறிமுக விழா ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கிணத்துக்கடவு தாமோதரன், பொள்ளாச்சி ஜெயராமன், மடத்துக்குளம் மகேந்திரன், உடுமலை ராதாகிருஷ்ணன், அமுல் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினராக சட்டசபை எதிர்க்கட்சி கொறடாவும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டார்.

அப்போது பேசிய எஸ்.பி. வேலுமணி பேசுகையில், ”திமுகவினர் திருட்டுத்தனமாக பல வேலைகள் செய்வார்கள். ஆதலால் பூத் கமிட்டி நிர்வாகிகள் வார்டு வார்டாக பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரிக்க வேண்டும். இந்த தேர்தல் திமுக அதிமுக நடக்கும் போட்டி ஆகும். ஆதலால் இருக்கும் 19 நாட்கள் இரவு பகல் பாராமல் வேட்பாளர் கார்த்திகேயனை வெற்றி பெற செய்ய வேண்டும். அதிமுக நாற்பது தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவார்” எனத் தெரிவித்தார்.

பின்னர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், “ அதிமுகவுக்கு துரோகம் செய்தவர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். கடந்த மூன்று வருடங்களாக திமுக விடிய அரசு எந்த திட்டங்களும் செயல்படுத்தவில்லை. இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். என்ன மலை அண்ணாமலை அனுபவம் பத்தாது. சின்ன வயசு கார்த்திகேயன் வெற்றி அண்ணாமலையை காத்துலா காணாமல் போய்விடும்.

என்ன பயமா? ஈடி ரைடு, வருமானவரித்துறை சோதனை இதற்கெல்லாம் அதிமுக அஞ்சாது. கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி அடுத்தது இன்ப நிதி தமிழக மக்களுக்கு துன்ப நிதி குடும்ப ஆட்சி விரைவில் வீட்டுக்கு அனுப்பப்படும். வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெற்று வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடியார் ஆட்சி தமிழகத்தில் மலரும்” எனத் தெரிவித்தார்.

Updated On: 26 March 2024 4:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...