திமுக அறிவித்த எந்த திட்டங்களும்- பயன்பாட்டில் இல்லை : பாஜக மாநில விவசாய அணி தலைவர்நாகராஜ்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜ மாநில விவசாய அணி தலைவர் நாகராஜ்.
Bjp Agriculture Team Leader Interview
பாரதிய ஜனதா கட்சி சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே திப்பம்பட்டி கிராமத்தில் 882 குடும்ப அட்டைக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பாஜகவின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே. நாகராஜ் பங்கேற்று நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஜகவின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் பாஜக மாநில விவசாய அணி தலைவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தேங்காயில் தாய்ப்பாலுக்கு நிகரான சத்து உள்ளது. தேங்காய் எண்ணெயைத்தான் சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என பாஜக கூறி வருகிறது. கேரள மாநிலத்தில் சமையலுக்கு தேங்காய் எண்ணெய் தான் மக்கள் பயன்படுத்துகின்றனர். கேரளா அரசும் தேங்காய் எண்ணையை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்கி வருகிறது.
மத்திய அரசு விவசாயிகளிடமிருந்து கொப்பரையை கொள்முதல் செய்து வைத்திருக்கிறது. அதை தமிழக அரசு வாங்கி எண்ணையாக உற்பத்தி செய்து, அதை தமிழக மக்களுக்கு நியாய விலை கடைகள் மூலம் வழங்க வேண்டும். தமிழகத்திலும் மக்கள் சமையலுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்த வேண்டும். இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்ல விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தும். மேலும் பாமாயில் இறக்குமதி குறைந்து உள்ளூர் உற்பத்தியான தேங்காய் எண்ணெய் விற்பனை அதிகரிப்பதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்படும். நியாய விலை கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என திமுக அறிவித்திருந்தது. இதுவரை வழங்கவில்லை.
இதை வலியுறுத்தும் விதமாக முதற்கட்டமாக இந்த கிராமத்தில் ரேஷன் அட்டை களுக்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்குவதை தொடங்கி வைத்துள்ளோம். அடுத்த கட்டமாக ஒவ்வொரு கிராமமாக ரேஷன் அட்டைகள் வைத்திருப்பதற்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும். கொப்பரை கொள்முதலில் இடைத்தரகர்களின் தலையீடு இருப்பதால் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதை தடுக்க தமிழக அரசு தேங்காய் கொள்முதல் செய்து அவற்றை தேங்காய் எண்ணையாக உற்பத்தி செய்து ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும்” என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu