balloon festival-பொள்ளாச்சியில் பலூன் திருவிழா..! சுற்றுலாத்துறை ஏற்பாடு..!
balloon festival-பொள்ளாச்சி பலூன் திருவிழா (கோப்பு படம்)
கோவை மாவட்டத்தின் சுற்றுலாத் தலமாக பொள்ளாச்சி விளங்குகிறது. சினிமா படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் முதன்மையாக விளங்கிய இடமும் பொள்ளாச்சி. விவசாயம் செழித்து சாகுபடி செய்வதிலும் பொள்ளாச்சி சிறப்பு பெற்ற இடமாகும்.
இவ்வாறு சுற்றுலாவில் பொள்ளாச்சி சிறப்பாக விளங்குவதால் மேலும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தமிழக சுற்றுலாத்துறை பலூன் திருவிழாவை நடத்த திட்டமிட்டுட்டள்ளது. அதே காலகட்டத்தில் பொங்கல் திருவிழா வருவதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சரி ஓகேங்க.. இப்போ நாம் பொள்ளாச்சிக்கு போனால் என்னவெல்லாம் பார்க்கலாம் என்று பார்ப்போமா..? விஜயகாந்த பாட்டு ஒன்னு உங்களுக்கெல்லாம் தெரியும் என்று நினைக்கிறேன்.. 'மூக்குத்தி முத்தழகு மூன்றாம் பிறை பொட்டழகு ..பொள்ளாச்சி மண்ணில் விளைந்த நெல்லுமணி பல்லழகு..' இந்த பாட்டு வரிகள் பொள்ளாச்சி பகுதி விவசாயத்தில் சிறந்து விளங்குவதை உறுதிப்படுத்துகிறது. சரி வாங்க பொள்ளாச்சிக்கு போனால் பார்க்கவேண்டிய இடங்கள் பற்றிப் பார்ப்போம்.
பொள்ளாச்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்களில் சுப்ரமண்யர் திருக்கோயில், பொள்ளாச்சியின் மிகப் பிரபலமான பார்க்கவேண்டிய இடமாகும்.
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை
பொள்ளாச்சியின் வெல்லச் சந்தை தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய வெல்லச் சந்தையாகும். இங்கு உள்ள காய்கறிச் சந்தை, கேரளாவின் மத்தியப் பகுதிகளுக்கு, காய்கறி விநியோகம் செய்யும் பெரிய சந்தைகளுள் ஒன்றாக விளங்குகிறது.
அதே போல், தென்னிந்தியாவின் மிகப்பெரும் இரும்பு மற்றும் கால்நடைச் சந்தைகள் இங்கு அமையப்பெற்றுள்ளன. இச்சந்தைகள் போக, சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும் பல அணைக்கட்டுகள் இங்கு உள்ளன.
நீரார் அணை, ஆழியார் அணை, மீன்கார அணை, சோழியார் அணை, பெருவரிப்பள்ளம் அணை ஆகியன இங்குள்ள சில பிரபலமான அணைக்கட்டுகளாகும். இந்நகரில், ராமலிங்க சௌடேஷ்வரி அம்மன் கோயில், சுப்ரமண்யஸ்வாமி கோயில், மாசாணி அம்மன் திருக்கோயில், அழகுநாச்சி அம்மன் கோயில், திருமூர்த்தி கோயில், சூலக்கல் மாரியம்மன் திருக்கோயில், ஸ்ரீ வேலாயுதஸ்வாமி திருக்கோயில், ஈச்சநாரி விநாயகர் திருக்கோயில், அம்பரம்பாளையம் தர்க்கா மற்றும் அருள்மிகு பிரசாந்த விநாயகர் கோயில், போன்ற பல கோயில்களைக் காணலாம்.
இந்நகர், ஆழியார் சித்தாஷ்ரமம், ஆனைமலை வனவிலங்கு சரணாலயம், டாப் ஸ்லிப், வால்பாறை, மாசாணியம்மன் கோயில், அமராவதி அணை மற்றும் முதலை பூங்கா ஆகிய பல இடங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu