900 கிலோ காரை 2.40 விநாடிகளில் 220 மீட்டர் தூரம் இழுத்து 7 வயது சிறுவன் சாதனை
காரை இழுத்துச் சென்று உலக சாதனை படைத்த சிறுவன் தேவசுகன்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி மாரீஸ்வரி. இந்த தம்பதியினரின் 7 வயது மகன் தேவசுகன். இந்த சிறுவன் கோவை தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். இதனிடையே தேவசுகனுக்கு சிறு வயதில் இருந்தே சாதனை படைக்கும் வகையில், அவனின் பெற்றோர் காரை இழுக்கும் பயிற்சி அளித்து வந்துள்ளனர். இந்நிலையில் காரை இழுப்பதில் நன்கு பயிற்சி பெற்று, மருத்துவரின் உடற்தகுதி சான்றிதழ் பெற்ற சிறுவன் தேவசுகன், இன்று உலக சாதனை படைக்கும் முயற்சியில் ஈடுபட்டான். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் - வால்பாறை சாலையில் 900 கிலோ எடை உள்ள ஒரு காரை இழுக்கும் உலக சாதனை நிகழ்வு நடைபெற்றது.
காரின் முன்புறம் கயிறு கட்டப்பட்ட நிலையில் சிறுவன் தேவசுகன் 2 நிமிடம் 40 வினாடிகளில் 220 மீட்டர் தூரத்திற்கு காரினை இழுத்து சென்று உலக சாதனை படைத்தான். சிறுவன் காரை இழுத்து சென்ற போது அங்கிருந்த பார்வையார்கள் கைதட்டி உற்சாகபடுத்தியதோடு பாராட்டும் தெரிவித்தனர். சிறுவனின் இந்த உலக சாதனை சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.
இதற்கான சான்றிதழ் மற்றும் பதக்கமும் சோழன் உலக சாதனை நிறுவன அதிகாரிகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். ஏற்கனவே இந்த சிறுவன் மதுரையில் 200 மீட்டர் தூரம் காரை இழுத்து சென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 7 வயது சிறுவன் காரினை இழுத்து சென்று சாதனை படைத்தது பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu