ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

ஆற்றில் குளிக்க சென்ற சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
X
சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்
ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில், பள்ளி விடுமுறையில் இருந்த கோவை உக்கடம் பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஐந்து பேர் குளிக்க சென்றுள்ளனர். அப்போது ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மணிகண்டன் என்ற சிறுவன் ஆழமான பகுதிக்கு சென்றதாகவும், அந்த சிறுவன் மாயமானதாகவும் தெரிகிறது. இது குறித்து அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மாயமான சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு உக்கடம் பகுதியை சேர்ந்த 14 வயதான மணிகண்டன் என்ற சிறுவன் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். ஆழமான பகுதிக்கு சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ஆனைமலை காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோல பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐஜி காலனி சேர்ந்த சம்சுதீன். இவரது மனைவி கீதா, கணவருடன் வசித்து வருகிறார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார். இந்த நிலையில் தனது அம்மா வீட்டிற்கு செல்ல இருசக்கர ஓலோ பேட்டரி வாகனத்தில் அவர் சென்ற போது, மாட்டு சந்தை அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயம் ஏற்பட்ட கீதா சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய காவல் துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story