/* */

யூடியூப் பிரபலம்: தனி ஒருவனுக்காக குவிந்த இளைஞர்கள் பட்டாளம்

யூ டியூபில் பிரபலமான டி.டி.எப் .வாசன் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து சொல்ல மேட்டுப்பாளையம் பகுதியில் குவிந்த ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

HIGHLIGHTS

யூடியூப் பிரபலம்: தனி ஒருவனுக்காக குவிந்த இளைஞர்கள் பட்டாளம்
X

யூடியூபர் வாசன் பிறந்தநாளுக்கு கூடிய இளைஞர் கூட்டம், 

டிஜிட்டல் உலகத்தில் நாளுக்கு நாள் வளர்ந்து வரும் கணிணி மையத்தின் மற்றொருமொரு படைப்பான ஆன்ட்ராய்டு செல்போன் வளர்ச்சி உலகில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது.

தொழில்நுட்பங்கள் போட்டி போட்டுக் கொண்டு வளர்ந்து வரும் நிலையில் இன்று சமூக வலைதளங்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் ஒரு அங்கமாக தோன்றி யூடியூப் இன்று மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது.

யார் வேண்டுமானாலும் தனித்தனியாக யூடியூப் சேனல்களை தொடங்கியவர்கள் இன்று மிகவும் பிரபலமாக விளங்கி வருகின்றனர். அந்த வகையில் யூடியூப் சேனலில் மூலம் பிரபலமானவர் தான் டிராவல் வ்லாக்கராக ( Vlogger தொடர்ந்து குறுகிய வீடியோக்களை பதிவிடுபவர்) டி.டி.எப். வாசன் என்பவர்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் காரமடை அருகே வெள்ளியங்காடு அடுத்துள்ள முத்துக்கல்லூர் என்னும் கிராமப் பகுதியைச் சேர்ந்த இவர் முதன் முதலில் தனது தந்தையின் பழைய என்பில்டு வாகனத்தை வைத்து பயணத்தை தொடங்கினார். இவரிடம் தற்போது ஏராளமான சூப்பர் பைக்குகள் உள்ளது

கோவையில் இருந்து லடாக் வரை சென்று அதனை வீடியோவாக யூடியூபில் பதிவிட்ட நிலையில் இலட்சக்கணக்கான இளைஞர்களால் அது லைக் செய்யப்பட்டது. இதனையடுத்து சூப்பர் பைக்குகள் மூலம் இந்தியா முழுவதும் சுற்றி வரும் டி.டி.எப். வாசன் தன் பக்கம் லட்சக்கணக்கில் இளைஞர்களை மட்டும் அல்ல பணத்தையும் சம்பாதித்து வருகிறார்.

அசுர வேகம் அசாத்திய திறமைகள் என பைக்கில் இவர் காட்டிய சாகசங்களை கண்டு இளைஞர்கள் வாசனின் ரசிகர்களாக மாறிவிட்டனர். மேலும் வழிநெடுக இவர் பைக்கில் பயணம் செய்யும்போது சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு பணம் பரிசு கொடுப்பது என அவர்களது மனங்களை கவர்ந்தவர்.

இந்த நிலையில் தனது பிறந்த நாளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக சென்னையில் இருந்து கடந்த 30 ஆம் தேதி தனது கிராமத்திற்கு வந்தார். அப்போது தனது ரசிகர்களை மேட்டுப்பாளையம் அன்னூர் மெயின் ரோட்டில் உள்ள தனியார் ரெஸ்டாரண்டில் சந்திக்க விரும்புவதாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு இருந்தார்.

இதனைத் தொடர்ந்து டி.டி.எப். வாசன் தனது வீட்டில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடிவிட்டு தனது ரசிகர்களை சந்திப்பதற்காக ரெஸ்டாரண்டுக்கு வந்தார். அங்கே கேக்குடன் கூடியிருந்த இளைஞர்களை கண்டதும் டி டி எப் வாசன் ஆச்சரியத்தில் மூழ்கி போனார். மிகப் பிரபலமான நடிகர் நடிகைகளை காண வரும் கூட்டத்தை விட அங்கு ஆயிரக்கணக்கான இளைஞர்கள் திரண்டிருந்தனர்.

அவரை பார்ப்பதற்கும் அவர் பேச்சை கேட்பதற்கும் இளைஞர் பட்டாளம் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் மிக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நேரம் செல்லச் செல்ல அவரை காண இளைஞர்கள் கூட்டம் சாரய் சாரையாக வந்த வண்ணம் இருந்ததால் அந்த வழியே போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது

கூட்டத்தை சமாளிக்க காரமடை போலீசார் கூட திணறினர். கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் டி டி எப் வாசனிடம், இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு காவல்துறையினரிடம் முன் அணிவது பெற வேண்டும். ஆனால் இதற்கு உரிய முன் அனுமதி எதுவும் பெறவில்லை .எனவே மேற்கொண்டு எந்த நிகழ்ச்சியும் இங்கு நடத்தக்கூடாது என போலீசார் அவரை எச்சரித்து அங்கிருந்துஅனுப்பி வைத்தனர்

இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது

Updated On: 5 July 2022 1:30 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  2. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  3. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  4. தொழில்நுட்பம்
    550 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள டிரிபிள்-ஸ்டார் சிஸ்டத்தை கைப்பற்றிய...
  5. உலகம்
    எகிப்தியர்கள் பிரமிடுகளை எவ்வாறு கட்டினார்கள் என்ற மர்மத்துக்கு...
  6. வீடியோ
    NO பருப்பு NO பாமாயில் எதனால் இந்த நிலைமை || #mkstalin #tngovt...
  7. இந்தியா
    அச்சம் தந்த அக்னி..! பயணிகள் பேருந்து தீவிபத்தில் 10 பேர் கருகி...
  8. பூந்தமல்லி
    வழி தவறி சென்ற குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்டு கொடுத்த...
  9. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதையில் இருசக்கர வாகனத்தை திருட முயன்றவர்களை போலீசில்...