பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது: 8 சவரன் தங்க நகை, கார் பறிமுதல்

பட்டப்பகலில் வீடு புகுந்து திருடியவர் கைது: 8 சவரன் தங்க நகை, கார் பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட அஜித்

கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் முகத்தை மறைத்தபடி உள்ளே புகுந்த இரு கொள்ளையர்கள், தங்க நகைகளைத் திருடிச் சென்றனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த குன்னத்தூர் எஸ்.வி.டி கார்டனில் வசிப்பவர் தங்கவேல். இவரது வீட்டில் கடந்த 13 ஆம் தேதியன்று வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து, கைகளில் பயங்கர ஆயுதங்களுடன் முகத்தை மறைத்தபடி உள்ளே புகுந்த இரு கொள்ளையர்கள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த 8 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்றனர். இது குறித்து வீட்டின் உரிமையாளர் தங்கவேல் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் என்கிற முனியாண்டி (24) என்பவர் திருட்டில் ஈடுபட்டதை கண்டுபிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து திருடப்பட்ட 8 சவரன் தங்க நகை மற்றும் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அஜித், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரையும் போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கொள்ளையர்கள் இருவர் வீட்டில் ஆயுதங்களுடன் சுற்றி வந்து பொருட்களை களைந்து பார்க்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது