மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டி செல்லும் வழித்தடத்தில் போக்குவரத்து மாற்றம்
பைல் படம்
ஊட்டியில் கோடை சீசன் தொடக்கம்காரணமாக மேட்டுப்பாளையத்தில் நேற்று முதல் 2 மாதத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது. தற்போது ஊட்டியில் குளுகுளு கோடை சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையம் நகரம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகளும் உள்ளூர் பொதுமக்களும் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில்கொண்டு போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் நகரில் நேற்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இந்த போக்குவரத்து மாற்றம் இன்று அமலுக்கு வந்தது.எந்த சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
மேட்டுப்பாளையம் வழியாக நீலகிரி செல்லும் வாகனங்கள் பாரத் பவன் ரோடு-ரெயில் நிலையம் ரோடு-சிவம் தியேட்டர்-சக்கரவர்த்தி சந்திப்பு வழியாக செல்லவேண்டும். நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள் ராமசாமி நகர் பாலப்பட்டி வேடர் காலனி-சிறுமுகை ரோடு-ஆலங்கொம்பு சந்திப்பு-தென்திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.
நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல்-சந்தக்கடை-மோத்தைபாளையம்-சிறுமுகை ரோடு-ஆலாங்கொம்பு-தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளது. மேட்டுப் பாளையம்-சிறுமுகை இடையே ஒரு வழிபாதையாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. சத்தியமங்கலம் பண்ணாரி-ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு-தென் திருப்பதி 4 ரோடு-அன்னூர் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu