மேட்டுப்பாளையம் வளர்ச்சி திட்ட பணிகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு

மேட்டுப்பாளையம்  வளர்ச்சி திட்ட பணிகள்: தலைமை செயலாளர் நேரில் ஆய்வு
X

மேட்டுப்பாளையம் வளர்ச்சி திட்ட பணிகளை ஆய்வு மேற்கொள்ளும் தலைமை செயலாளர் 

பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் அறிவுறுத்தினார்.

மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் நடைபெறும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்ய தமிழக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று மேட்டுப்பாளையத்திற்கு வருகை தந்தார்.

மேட்டுப்பாளையம் நகராட்சியில் ரூ.100.7 கோடி மதிப்பில் நடந்து வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளை தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். அப்போது பாதாள சாக்கடை பணிகளை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பவானி ஆற்று நீரை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மாநகராட்சிக்கு குடிநீர் கொண்டு செல்லும் வகையில் நான்காம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. சுமார் ரூ.1,100 கோடி திட்ட மதிப்பில் மேட்டுப்பாளையம் நகராட்சி நீரேற்று நிலையம் அருகே பவானி ஆற்றங்கரையில் இத்திட்டம் நடைபெற்று வருகிறது.

அதேபோல் மேட்டுப்பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் செல்லும் வழியில் சாமன்னா தலைமை நீரூற்று நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து திருப்பூர் குடிநீர் திட்டம் கோவை தொண்டாமுத்தூர் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

மேற்கண்ட பணிகளையும் தமிழ்நாடு தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு விரைவில் பணிகளை முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

ஆய்வின் போது கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மண்டல இயக்குநர் இளங்கோவன், திருப்பூர் மாநகராட்சி ஆணையர் பவன்குமார், கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், நகராட்சி ஆணையாளர் அமுதா, மேட்டுப்பாளையம் நகராட்சி அலுவலகத்தில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத் தலைவர் அருள்வடிவு முனுசாமி உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!