வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி தப்பி ஓடும்போது விபத்து ; காலில் எலும்பு முறிவு

வழிப்பறியில் ஈடுபட்ட குற்றவாளி தப்பி ஓடும்போது விபத்து ; காலில் எலும்பு முறிவு
X

ஜெர்மன் ராகேஷ்

தப்பியோட முயன்ற போது வழுக்கி விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் பூபதி. இவர் எல்லப்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை வழி மறித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பூபதியின் செல்போனை பறித்ததோடு, அவரிடம் இருந்த பணத்தையும் கொள்ளை அடித்து உள்ளார். பின்னர் அந்த நபர் அங்கிருந்து தப்பியோட முயன்ற போது வழுக்கி விழுந்ததுக கூறப்படுகிறது. அதி அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

பின்னர் அங்கு வந்த காவல் துறையிடம் அவர் சிக்கிக் கொண்டார். காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அந்த நபர் கொள்ளை வழக்கு குற்றவாளியான ஜெர்மன் ராகேஷ் என அடையாளம் காணப்பட்டார். இவர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு பழைய குற்றவாளி என்பதும் தெரிய வந்தது.தற்போது ஜெர்மன் ராகேஷுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் மீது காவல் துறையினர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!