குடிநீர் கேட்டு மேட்டுப்பாளையத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

குடிநீர் கேட்டு மேட்டுப்பாளையத்தில் காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
X

குடிநீர் கேட்டு மேட்டுப்பாளையத்தில் காலி குடங்களுடன்  சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்

நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வராததைக் கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

மேட்டுப்பாளையம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் குடியிருந்து வருகின்றனர். நகர் மக்களுக்கு பவானி ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்து குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே நகராட்சிக் குட்பட்ட 23-வது வார்டில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வருவதில்லை என பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக நகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் முறையாக குடிநீர் வழங்கப்படாத நிலையே நீடித்தது.. இதனால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த வார்டு உறுப்பினர் கவிதா புரு ஷோத்தமன் தலைமையில் காட்டூர் ரயில்வே கேட் பகுதியில் காலி குடங்களுடன் திரண்டு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதனால் காட்டூர் பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோயம்புத்தூர்-குடலூர் மாநில நெடுஞ்சாலைகளில் பவானி ஆற்றின் கரையில் நீலகிரி அடிவாரத்தில் மேட்டுப்பாளையம் நகராட்சி அமைந்துள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சி 1948 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மேட்டுப்பாளையம் நகராட்சி1978 முதல் கிரேடு நகராட்சியாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தேர்வு தர நகராட்சியா 1998 -ல் மேம்படுத்தப்பட்டது.மேட்டுப்பாளையம் நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், தி.மு.க., 22...இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.



Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!