கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

கோவை: லாரியில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
X

கோவை, மேட்டுப்பாளையத்தில் நடந்த வாகனச் சோதனையில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த லாரி பிடிபட்டது. 

கோவை மேட்டுப்பாளையம் அருகே, லாரியில் கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன; இது தொடர்பாக, 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்ட தனிப்பிரிவு காவலர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, மேட்டுப்பாளையம் அருகே பாரதி நகரில் வாகன தணிக்கை நடத்தினர். சோதனையின்போது, அங்கு வந்த லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர்.

அந்த லாரிக்குள் ரகசியமாக பேப்பர் லோடின் உள்ளே மறைத்து கொண்டு வரப்பட்ட, மொத்தம் 277.89 லிட்டர் அளவுடைய 320 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 1 இலட்சத்து 14 ஆயிரம் ரூபாய் ஆகும்.

இது தொடர்பாக, லாரி ஓட்டுனர் பாபு மற்றும் உரிமையாளர் ராஜேந்திரன் ஆகியோரை, காவல் துறையினர் கைது செய்தனர். லாரியையும் பறிமுதல் செய்தனர். இதுபோன்ற சட்டத்திற்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் துறை சார்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு