அன்னூரில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது: 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்

அன்னூரில் கஞ்சா கடத்தி வந்தவர் கைது: 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்
X

கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரசாத் ஜெனா.

அன்னூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் துறையினர் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்.

அதன் அடிப்படையில் இன்று அன்னூர் காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு கொண்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் அன்னூர் காவல் நிலைய காவல் துறையினர் அன்னூர் - சிறுமுகை சாலை அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சாவை விற்பனைக்கு கொண்டு வந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சய் பிரசாத் ஜெனா (26) என்பவர் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டத்தில் போதை பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டும், அதன் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களது நடவடிக்கையின் பேரில் கடந்த 01.01.2023 முதல் தற்போது வரை காவல் துறையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 654 நபர்கள் மீது 486 வழக்குகள் பதிவு செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 866.586 கிலோ கிராம் எடையுள்ள கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதுபோன்று போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ, ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவர்கள் குறித்து கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
இன்ஸ்டாகிராம் முடக்கம் !!! பயனர்கள் அதிர்ச்சி !! அதிகரிக்கின்றது புகார்கள் !!! | why does instagram hang up by itself