மேட்டுப்பாளையம் அருகே துரிதமாக நடைபெறும் தடுப்பணை கட்டுமானப்பணிகள்

மேட்டுப்பாளையம் அருகே துரிதமாக நடைபெறும்  தடுப்பணை கட்டுமானப்பணிகள்
X

தோளம்பாளையம் தடுப்பணை பாலம் கட்டுமான பணி

பெரியபள்ளம் பகுதியில் ரூ. 2. 67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் இருந்து வெள்ளியங்காடு செல்லும் பாதையில் பெரியபள்ளம் பகுதியில் ரூ. 2. 67 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணியானது கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

இந்த நிலையில் தடுப்பணை கட்டும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதனால் தற்போது 75 சதவீதத்துக்கும் மேற்பட்ட பணிகள் முடிவடைந்துள்ளன. இன்னும் 10 நாள்களில் தடுப்பணை கட்டும் பணிகள் நிறைவு பெவுற்று மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழவில், நீர்வழிப் பாதையில் உள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் எனவும் பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: - தோலம்பாளையம் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்டினால் மழைக்காலங்களில் வீணாகும் மழை நீரை சேமித்து வைக்க இயலும். இதனால் தோலம்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும். இதனால் பெரியபள்ளம் பகுதியில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை தாங்கள் தொடர்ந்து அரசிடம் வலியுறுத்தி வந்தததை, ஏற்று அப்பகுதியில் தடுப்பணை கட்ட அரசு நிதி ஒதுக்கி அதற்கான பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தடுப்பணை கட்டப்பட்டு வரும் பகுதியில் உள்ள நீர் வழித்தடங்கள் புதர் மண்டி காணப்படுகிறது. இதனை அகற்றினால் மட்டுமே இப்பகுதியில் தடுப்பணை கட்டுவதன் நோக்கம் முழுமையாக நிறைவேறும். அதனை செய்யாமல் தடுப்பணை கட்டி முடிப்பதால் எதிர்பார்க்கும் பயன் எப்படி கிடைக்கும் என பொதுமக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது என்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!