கோவை மாவட்டம் அன்னூரில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது

கோவை மாவட்டம் அன்னூரில் இளைஞரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேர் கைது
X

கைது செய்யப்பட்டவர்கள் 

பீர் பாட்டிலைக் கொண்டு மிரட்டி, செல்போன், வெள்ளி பிரேஷ்லெட் மற்றும் 3 கிராம் தங்க கடுக்கன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் யஷ்வந்த்குமார். 23 வயதான இவர், கடந்த 1 ம் தேதியன்று நாரணாபுரம் ஜே.ஜே பம்ஸ் கம்பெனி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத 4 நபர்கள் யஷ்வந்த்குமாரை பீர் பாட்டிலைக் கொண்டு மிரட்டி, அவரிடமிருந்த செல்போன், ஆயிரம் ரூபாய் பணம், வெள்ளி பிரேஷ்லெட் மற்றும் 3 கிராம் தங்க கடுக்கன் ஆகியவற்றை வழிப்பறி செய்துள்ளனர். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக யஷ்வந்த் குமார் அன்னூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் குன்னத்தூர் பகுதியைச் சேர்ந்த கோகுல் (27), பூபதிராஜ் (27), வினோத்குமார் (30) மற்றும் சந்தோஷ் (27) ஆகியோர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 4 நபர்களை கைது செய்த காவல் துறையினர்,அவர்களிடமிருந்து தங்க கடுக்கன் மூன்று கிராம் மற்றும் வெள்ளி பிரேஷ்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!