தடுப்பூசி டோக்கன் வழங்கலில் குளறுபடி - கோவையில் பொதுமக்கள் மறியல்

தடுப்பூசி டோக்கன் வழங்கலில் குளறுபடி - கோவையில் பொதுமக்கள் மறியல்
X

கொரோனா தடுப்பூசிக்கான டோக்கன் வழங்கலில் குளறுபடி நடப்பதாகக்கூறி,  கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள். 

கோவை, அரிசிபாளையத்தில், தடுப்பூசி டோக்கன்கள் குறைவாக வழங்கப்பட்டதாகக்கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளதால், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டு வருகின்றனர். மாவட்டத்தில், 124 மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதேநேரம், ஒருசில இடங்களில் தடுப்பூசிகள் போடுவதற்கு குறைவான டோக்கன்கள் கொடுப்பதாகவும், தடுப்பூசிகளை ஊராட்சி மன்ற தலைவர் காசுக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோவை மாவட்டம் அரிசிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், தடுப்பூசி போடுவதற்கு குறைவான டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டதாகக் கூறி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமரச பேச்சு நடத்தி கலைத்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 250 தடுப்பூசிகள் வீதம் போடப்படுவதாக கூறப்பட்ட நிலையில், 40 டோக்கன்கள் மட்டும் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் நீண்ட நேரமாக காத்திருந்த பொதுமக்கள் சுகாதாரத் துறையிரிடமும், திமுக ஊராட்சி மன்ற தலைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, அரிசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் தடுப்பூசிகளை தனியாருக்கும், கட்சியினருக்கும் பணத்திற்கு விற்பதாக சிலர் குற்றம்சாட்டினர். முறையாக தடுப்பூசி செலுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்