பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்

பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு உணவு வழங்கிய தமிழக வெற்றிக் கழகம்
X

உணவு வழங்கிய தவெக

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியுள்ள நடிகர் விஜய், தனது அரசியல் பயணத்தை தீவிரப்படுத்தி வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் ஒருவேளை மதிய உணவு வழங்க வேண்டி தனது ரசிகர்களுக்கு விஜய் கட்டளை இட்டிருந்தார். அதன்படி உலக பட்டினி தினத்தை முன்னிட்டு ஒரு வேளை உணவு சேவை என்ற திட்டத்தின் அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ஒரு வேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு மாவட்ட தவெக இளைஞரணி சார்பாக சுந்தராபுரம் பகுதியில் உள்ள உழவர் சந்தைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெற்கு மாவட்ட தலைவர் விக்னேஷ், இளைஞரணி தலைவர் பாபு மற்றும் நிர்வாகிகள் இணைந்து வழங்கிய அன்னதானம் வழங்கினர். இதனை தூய்மை பணியாளர்கள், விவசாயிகள், காய்கறி வியாபாரிகள், ஓட்டுனர்கள் என ஏராளமானோர் பலர் உணவு வாங்கி சாப்பிட்டு சென்றனர்.

இதேபோல் கோவை, பொள்ளாச்சி, வால்பாறை, கிணத்துக்கடவு ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட போத்தனூர், வெள்ளலூர், மதுக்கரை மார்க்கெட், பொள்ளாச்சி, கிணத்துகடவு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தமிழக வெற்றிக் கழகத்தினர் சார்பில் உணவு வழங்கினர். இதனை பல்வேறு தரப்பினரும் வாங்கி பசியாறி சென்றனர். மேலும் உணவு வழங்கிய தவெகவினருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.


Tags

Next Story