மாநில நீச்சல் போட்டி:பல்வேறு மாவட்டங்களில் இருந்து 186 பேர் பங்கேற்பு

மாநில நீச்சல் போட்டி:பல்வேறு மாவட்டங்களில் இருந்து 186  பேர் பங்கேற்பு

சீராபாளையம் ஊராட்சிக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் வேதாந்தா அகாதெமி பள்ளியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது.

சீராபாளையம் ஊராட்சிக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் வேதாந்தா அகாதெமி பள்ளியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு அருகே போடிப்பாளையத்தில் டால்ஃபின் ஷிம்மிங் கிளப் மற்றும் தெக்கலத்தான் இணைந்து மாநில அளவிலான நீச்சல் போட்டியை நடத்தினர்.

சீராபாளையம் ஊராட்சிக்குட்பட்ட போடிபாளையம் பகுதியில் வேதாந்தா அகாதெமி பள்ளியில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் 6 வயது, 8 வயது, 9, வயது 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இதில் மொத்தம் 24 போட்டிகள் நடைப்பெற்றது. மேலும் சேலம், திருப்பூர், நாமக்கல், ஈரோடு உட்பட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 186 குழந்தைகள் மாணவ, மாணவிகள் பங்கு பெற்றனர். இதில் சிறப்பு விருந்தினராக சீராபாளையம் ஊராட்சித் தலைவர் கணேசன் கலந்து கொண்டு போட்டியில் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கோப்பைகளை வழங்கினார்.

இப்பரிசளிப்பு விழாவில் போடிபாளையம் தலைவர் கணேசன், டால்பின் ஸ்விம்மிங் கிளப் நிர்வாக இயக்குனர் மஞ்சுசக்திவேல், மற்றும் பயிற்சியாளர்கள் என ஏராளமனோர் கலந்து கொண்டனர்.

நீச்சல் பயிற்சியின் நன்மைகள் குறித்து நீச்சல் ஆர்வலர்கள் கூறியதாவது: தினந்தோறும் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம், நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி தற்காப்பு கலையாக பயன்படுவது மட்டுமின்றி, உடலுக்கும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது. உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சிகள் பெரிதும் உதவி புரிகிறது. இது தவிர பல பயிற்சிகளும் உள்ளது. அதில் ஒன்றுதான் நீச்சல் பயிற்சி.

தண்ணீரில் நீச்சல் அடிப்பதன் காரணமாக உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்பாக இயங்கும். சொல்லப்போனால், தினந்தோறும் நீச்சல் பயிற்சி செய்வதன் மூலம், நமக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. நீச்சல் பயிற்சி தற்காப்பு கலையாக பயன்படுவது மட்டுமின்றி, உடலுக்கும் பலவிதமான ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கிறது.

தினந்தோறும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் நீச்சல் பயிற்சியி மேற்கொண்டால், 350-க்கும் மேற்பட்ட கலோரிகள் எரிக்கப்படும் என கூறப்படுகிறது. தண்ணீரில் நீந்தும் சமயத்தில், உடலில் உள்ள அனைத்து தசைகளும் வேலை செய்கிறது. மேலும் கை, கால் மற்றும் தொடைப் பகுதியில் இருக்கும் தசைகள் வலிமை அடைகிறது. இதுமட்டுமல்லாமல், உடலுக்கு மேலும் பல நன்மைகளைத் தருகிறது இந்த நீச்சல் பயிற்சி.

உடலில் உள்ள கொழுப்பு மற்றும் இரத்த அழுத்தத்தின் அளவை நீச்சல் பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்தலாம்.நீச்சல் பயிற்சி செய்வதனால் மன அழுத்தம் குறைந்து, தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவுகிறது.நீச்சல் பயிற்சி, உடல் எடை கூடுவதை அறவே தவிர்த்து விடும்.

தினசரி நீச்சல் பயிற்சியால், நுரையீரலுக்கு செல்லக்கூடிய ஆக்சிஜனின் அளவை அதிகப்படுத்த முடியும்.நரம்பு மண்டலம் சீராகும். தசைகள் இறுகும். நன்றாக பசி எடுக்கும். நல்ல உறக்கம் வரும்.மனதிற்கு மகிழ்ச்சியையும், உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும் தரும். வயிறு நிறைய சாப்பிட்டு விட்டோ அல்லது காலியான வயிற்றுடனோ நீச்சல் பயிற்சியை செய்யக் கூடாது.

தண்ணீரில் நீந்தும் முன்பாக தகுதியான மீட்பாளர்களும், தகுதியான பயிற்சியாளரும், நீச்சல் குளத்தில் இருப்பது மிகவும் அவசியம்.நீச்சல் குளத்தில் உள்ள தண்ணீரானது அடிக்கடி சுழற்சி முறையில் சுத்தப்படுத்தப்பட வேண்டியதும் மிக அவசியம்

Tags

Next Story