அனுமதி இல்லாமல் செயல்பட்ட மனநல காப்பகத்திற்கு சீல்

அனுமதி இல்லாமல் செயல்பட்ட மனநல காப்பகத்திற்கு சீல்
X

Coimbatore News- சீல் வைக்கப்பட்ட காப்பகம் 

Coimbatore News- கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு பகுதியில் அனுமதி இல்லாமல் செயல்பட்ட மனநல காப்பகத்திற்கு சீல் வைக்கப்பட்டது.

Coimbatore News, Coimbatore News Today- கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம் பாளையத்தில் தனியார் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், முதியவர்கள், ஆதரவு இல்லாதவர்கள் 39 பேர் வசித்து வருகின்றனர். இதில் 30 பேர் ஆண்கள், 9 பெண்கள் உள்ளனர். இந்த தனியார் காப்பகத்தை ஆய்வு செய்வதற்காக கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் உத்தரவின் பேரில் கோவை மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ராஜசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன், மனநல மருத்துவர் டாக்டர் கிருத்திகா ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அப்போது காப்பகத்தில் ஒரே அறையில் அதிக நபர்களை அடைத்து வைத்திருந்ததும், காப்பகத்தில் உள்ள சிலருக்கு காலில் இரும்பு விலங்கு மாட்டப்பட்ட நிலையிலும், கழிப்பிடம் தொற்றுநோய் பரப்பும் விதமாக மிகவும் மோசமான இருந்ததால் சுகாதாரத் துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சந்திரமோகன் காப்பகத்திற்கு அனுமதி பெறப்பட்டதா என்று ஆய்வு செய்த போது, இந்த காப்பகம் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித அனுமதி இன்றி செயல்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து அதிகாரிகள் உடனடியாக மாவட்ட கலெக்டருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர்.

இந்நிலையில் மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் அனுமதி இன்றி செயல்பட்டு வந்த காப்பகத்தில் இருந்த ஆண்கள் மற்றும் பெண்களை அங்கிருந்து அரசு அங்கீகரிக்கப்பட்ட மனநலக் காப்பகத்திற்கு வாகனங்களில் அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வருவாய்த் துறையினர் முன்னிலையில் முறையான அனுமதி இன்றி செயல்பட்ட காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!