குனியமுத்தூர் அருகே சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

குனியமுத்தூர் அருகே சிறுத்தை   நடமாட்டத்தால் மக்கள் அச்சம்
X

கண்காணிப்பு பணிகளில்  ஈடுபட்டுள்ள வனத்துறையினர்.

Leopard Movement Public Feared குனியமுத்துார் அருகே சிறுத்தை இருப்பதாக வெளியான தகவல் காரணமாக மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்

Leopard Movement Public Feared

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் அதையொட்டிய அடர்ந்த வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை, காட்டு மாடு உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள், சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இரவு நேரத்தில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி கிராமப்பகுதிகளுக்குள் நுழைவது வழக்கம்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சுற்றி திரிந்த நாய் மற்றும் பூனை உள்ளிட்ட விலங்கினங்கள் மர்மமான முறையில் காணாமல் போனது. இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை வேட்டையாடுவதாக தகவல் பரவியது. அபராமி நகர், சுண்டக்காமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் நாய், பூனை போன்றவை மாயமாகின. இதனையடுத்து அப்பகுதி மக்கள் இது குறித்து மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் வந்த மதுக்கரை வனத்துறையினர் இன்று ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வனத்துறை குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் சந்தேகப்படும் படியான விலங்கினங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளனர். சிறுத்தை இருப்பதாக வெளியான தகவல் காரணமாக ஜே. ஜே நகர் மற்றும் அவரை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil