மதுக்கரையில் கல்குவாரியில் கொட்டப்படும் குப்பைகள் ; பொதுமக்கள் அவதி..!

மதுக்கரையில் கல்குவாரியில் கொட்டப்படும் குப்பைகள் ; பொதுமக்கள் அவதி..!
X

கல்குவாரியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள்

மூச்சு திணறல், சுவாச கோளாறுகள் இரவு நேர தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

கோவை மாவட்டம் மதுக்கரை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 27 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை, 23 ஆவது வார்டு சல்காரா என்ற ஹோட்டல் பின்புறம் உள்ள பயன்பாடற்ற கல் குவாரியில் கொட்டப்படுகிறது. ஒரு நாளைக்கு 13 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு கொட்டப்பட்டு வருகின்றன.

ஒரு டன் குப்பைக்கு 5565 ரூபாய் ஒப்பந்ததாரருக்கு நகராட்சி மூலம் வழங்கப்படுகிறது. 23 ஆவது வார்டில் ராஜேஸ்வரி நகர், ஸ்ரீ என்கிளேவ், பாலு என்கிளேவ், அம்பேத்கர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1500 பேர் வசித்து வருகின்றனர்.

சாலையோரம் கொட்டப்படும் குப்பையில் மர்ம நபர்கள் இரவு நேரங்களில் தீ வைப்பதால், தீ கொளுந்து விட்டு எரிகின்றது. இதனால் காற்று மாசு அடைகிறது. மூச்சு திணறல், சுவாச கோளாறுகள் இரவு நேர தூக்கம் பாதிப்பு உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். சில நேரங்களில் தீயணைப்பு துறையின் உதவியை நாட வேண்டிய அவசியம் உள்ளது. குப்பைகளை எரிப்பதால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதோடு நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.

பொதுமக்கள் வேறு வழியில்லாமல் அதனை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். அது சம்மந்தமாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் செவி சாய்க்காமல் கண்டு காணாமல் இருந்து வருகின்றனர். குப்பைகள் கல்குவாரியில் கொட்டப்படுவதை தடுக்க கோவை மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

Tags

Next Story
பெருந்துறையில் புகையிலை விற்பனைக்கு எதிராக கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்