கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: கோவை தனியார் மருத்துவமனை மீது புகார்

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: கோவை தனியார் மருத்துவமனை மீது புகார்
X

தனியார் மருத்துவமனை மீது புகார் அளித்தவர்

கோவையில், ஏற்கனவே புகாருக்கு உள்ளான தனியார் மருத்துவமனை மீது, மாவட்ட ஆட்சியரிடம் இன்று மீண்டும் புகார் அளிக்ககப்பட்டது.

கோவையில் உள்ள சில தனியார் மருத்துவமனைகள், கொரொனா சிகிச்சைக்காக அதிக கட்டணம் வசூல் செய்வதாக, மாவட்ட நிர்வாகத்திக்கு தொடந்து புகார்கள் வருகின்றது. இதே புகாரின் பேரில், ஏற்கனவே இரண்டு மருத்துவமனைகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோவை சுங்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை உட்பட மேலும் 3 மருத்துவமனைகள் மீதும் புகார்கள் வந்துள்ளன. இந்நிலையில் ஏற்கனவே புகாருக்கு உள்ளான தனியார் மருத்துவமனை மீது, இன்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்ககப்பட்டது. கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரினை அளித்தார்.

அந்த புகாரில், தனது அண்ணன் மகள் ஆனந்தி, மருமகன் சின்னத்துரை, அண்ணி கற்பகம் ஆகியோர் கொரொனா காரணமாக அம்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனந்தியும், சின்னத்துரையும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கற்பகம் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில் மூன்று பேரின் சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் 29 லட்ச ரூபாயை கட்டணமாக விதித்துள்ளது.

இதில் 10 லட்சத்திற்கு மட்டுமே தங்களுக்கு ரசீது வழங்கியிருப்பதாகவும், மீதி 19 லட்ச ரூபாயக்கு பில் கொடுக்காமல் அலைக்கழிப்பதாகவும், புகார் மனுவில் அவர் கூறினார். மருத்துவமனையில் செவிலியர்கள் மட்டுமே சிகிச்சை வழங்கியதாகவும், கூடுதலாக கட்டணம் வசூல் செய்த அம்மருத்துவமனை மீது நடவடிக்கையும் எடுக்க வேண்டும் எனவும், அவர் தெரிவித்தார். இதுகுறித்து, அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil