கோவை மாவட்ட மக்கள் தொடர்பு முகாம்: ரூ.4.53கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
மக்கள்தொடர்பு முகாமில் 720 பயனாளிகளுக்கு ரூ.4.53கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் 720 பயனாளிகளுக்கு ரூ.4.53கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் (14.12.2022) நடைபெற்ற மக்கள்தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டு 720 பயனாளிகளுக்கு ரூ.4.53கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் தெரிவித்ததாவது: கோயம்புத்தூர் மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாமானது மாதந்தோறும் நடத்தப்பட்டுஇ மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, இன்று கிணத்துக்கடவு வட்டம், சொக்கனூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுகின்றது. இன்று நடைபெறும் முகாமிற்கு ஒருமாதத்திற்கு முன்பாகவே, துறைவாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தி இப்பகுதி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுஇ உரிய மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு அதற்கான நலத்திட்ட உதவிகளும் இந்த முகாம்களில் வழங்கப்படுகின்றது.
ஒவ்வொரு மாவட்ட ஆட்சித்தலைவர், மக்களோடு, மக்களாக கலந்து அவர்களின் கோரிக்கையினை கேட்டு உடனடியாக அந்த கோரிக்கைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்கள். அந்த ஆணையின்படி, இந்தமக்கள் தொடர்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. மேலும், கிராமப் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் மகளிர்சுய உதவிக்குழுக்கள் கடன் உதவி வழங்கி அரசு ஊக்குவித்து வருகிறது.
ஒரு கிராமத்திற்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அந்த தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்கின்ற வகையில்தான் இம்முகாம்கள் நடத்தப்படுகின்றன. மேலும், இன்று இம்முகாமில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மீது உரிய காலத்தில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும்இ இன்றைய தினம் நடைபெறுக்கின்ற இம்முகாமில், வருவாய்த்துறையின் சார்பில் முதலமைச்சரின் விபத்து நிவாரணம் நிதியின் கீழ் 1 நபருக்கு ரூ.1இலட்சம் மதிப்பில் நிவாரண நிதியும்இ 168 பயனாளிகளுக்கு ரூ.20.61இலட்சம் மதிப்பில் முதியோர் மற்றும் விதவை உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும், 109பயனாளிகளுக்கு ரூ.1.01கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்களும்இ வேளாண்மைத் துறையின் சார்பில் 09 விவசாயிகளுக்கு ரூ.5.99லட்சம் மதிப்பில் மானிய உதவித்தொகைகளும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 13 பயனாளிகளுக்கு ரூ.54700 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளும்இ ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 109 திட்டப்பணிகளுக்கு ரூ2.95கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி ஆணைகளும், மகளிர் திட்டம் சார்பில் 6மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு ரூ.12.20 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீடு நிதி மற்றும் வங்கி கடனுதவிகளும் வழங்கப்படுகிறது.
மேலும்இ சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.2.50லட்சம் மதிப்பில் வைப்பு பத்திரமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில் 52 பயனாளிகளுக்கு ரூ.2.53இலட்சம் மதிப்பில் சலவைப்பெட்டி மற்றும் தையல் இயந்திரங்களையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.5480 மதிப்பில் தையல் இயந்திரத்தையும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.3.30இலட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளையும்இ கூட்டுறவுத்துறையின் சார்பில் 22 பயனாளிகளுக்கு ரூ.7இலட்சம் மதிப்பில் வங்கி கடன் உதவிகளும்இ 24 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் 720 பயனாளிகளுக்கு ரூ.4.53கோடி மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.
ஜக்கார்பாளையம் பகுதியை சேர்ந்த சம்பத்குமார் என்ற இளைஞர் பொறியியல் துறையில் முனைவர் பட்டம்பெற்று இயற்கை வேளாண்மை முறையில் விவசாயத்தை சிறப்பாக மேற்கொண்டு வருவதற்கு என்னுடைய பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இவரைப் போன்ற ஆர்வமுள்ள இளைஞர்கள் கிராமத்தில் உருவாகவேண்டும். மேலும், இப்பகுதியை சேர்ந்த நந்தகுமார் மற்றும் அவருடைய மகள் ஸ்ரீநிதி தங்களுடைய 58.5 சென்ட் நிலத்தை ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைக்காக வழங்கி உள்ளார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இம்முகாமில் அனைத்து அரசுத்துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில், அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள அரங்குகளை பொதுமக்கள் பார்வையிட்டுஇ அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதுடன், தகுதியான திட்டங்களின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். மேலும், இம்முகாமை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், இப்பகுதி மக்களுக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் பேசினார்.
இம்முகாமில் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, கிணத்துகடவு பேரூராட்சி தலைவர் கதிர்வேல் துணைத்தலைவர் பாலகுமார், ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபு(எ) திருநாவுகரசு (சொக்கனூர், செந்தில்குமார் (சொலவம்பாளையம்,) சுந்தர்ராஜ் (அரசம்பாளையம்), ரத்தினசாமி(கோதவாடி) ருக்குமணிசிதம்பரம் (ஆண்டிபாளையம்), ராம்குமார் (பொட்டையாண்டிபுரம்பு) தர்மராஜ் (குதிரையாலம்பாளையம்) மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) கமலகண்ணன், திட்ட இயக்குநர் மகளிர் திட்டம் செல்வம், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் முருகேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) தமிழ்செல்வி, தோட்டக்கலை துணை இயக்குநர் புவனேஸ்வரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் தங்கமணி, வட்டாட்சியர் மல்லிகா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu