சூப்பர் பவர் உள்ளதாக கூறி விடுதி மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்

சூப்பர் பவர் உள்ளதாக கூறி விடுதி மாடியில் இருந்து குதித்த கல்லூரி மாணவர்
X

பிரபு

மாணவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து கோவை கல்லூரி மாணவர் திடீரென குதித்துள்ளார்.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் கற்பகம் பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரி விடுதியில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள மேக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபு (19) என்பவர் தங்கி படித்து வருகின்றார். இவர் நேற்று மாலை மாணவர் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து மாணவர் திடீரென குதித்துள்ளார். இதில் கை, கால்களில் எலும்பு உடைந்து பலத்த காயத்துடன் இருந்த அவரை சக மாணவர்களும் விடுதி நிர்வாகத்தினரும் மீட்டு கற்பகம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், அவர் கங்கா மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்டார்.

இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மாணவர் பிரபு பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும், தனக்கு சூப்பர் பவர் இருப்பதாக கற்பனையில் இருந்து வந்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் எந்த கட்டிடத்தில் இருந்தும் குதிக்க முடியும் என்று தனது நண்பர்களிடம் அடிக்கடி பேசி வந்த நிலையில் நேற்று மாடியில் இருந்து குதித்து இருப்பதும் தெரியவந்துள்ளது.

நேற்று மாலை 6.30 மணியளவில் கல்லூரி மாணவர்கள் விடுதியின் நான்காவது மாடியில் இருந்து அவர் குதிக்கும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளது. பக்கத்து மாடிக்கு தாவுவதாக கூறி குதித்த பிரபு தரையில் விழுந்து பலத்த காயம் அடைத்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது குறித்து செட்டிபாளையம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
வங்கி தேர்வில் முதலிடம் ராசிபுரம் மாணவனுக்கு வாழ்த்துகள் மலர்ந்த வரவேற்பு..!