கொங்கு பண்பாட்டு கலாசார அறக்கட்டளையின் சார்பில் கிராமியக் கலை திருவிழா

கொங்கு பண்பாட்டு கலாசார அறக்கட்டளையின் சார்பில் கிராமியக் கலை திருவிழா
X

கொங்கு பண்பாட்டு கலாச்சார அறக்கட்டளையின் ஏழாவது ஆண்டு விழா சிங்கை கிராமிய கலை திருவிழா

சிங்கை வள்ளி கும்மி, கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், ஜமாப் ஆட்டம், சிங்கை கோபியர் பிருந்தாவன கோலாட்டம் நடைபெற்றது

கொங்கு பண்பாட்டு கலாசார அறக்கட்டளையின் ஏழாவது ஆண்டு விழா சிங்கை கிராமிய கலை திருவிழா

கொங்கு பண்பாட்டு கலாசார அறக்கட்டளையின் ஏழாவது ஆண்டு விழா சிங்கை கிராமிய கலை திருவிழா இன்று கோவை வரதராஜபுரம் தியாகி என் ஜி ராமசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சிங்கை வள்ளி கும்மி, கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம், ஜமாப் ஆட்டம், சிங்கை கோபியர் பிருந்தாவன கோலாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியினை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் இ. ஆர் ஈஸ்வரன் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொடக்கி வைத்தார். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில பொருளாளர் பாலு, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி கலை இலக்கிய அணி துணைச் செயலாளர் ஆதன் பொன் செந்தில் குமார், தியாகி என் ஜி ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சதாசிவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சர்வதேச அலையன்ஸ் சங்கங்கள் ஆளுநர் மயில்சாமி, ருதம்பரா பவுண்டேஷன் இயக்குனர் சித்த ஸ்ரீ ஈசன் குருஜி, சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பேராசிரியர் சாந்தாமணி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொடர்ந்து கொங்கு பன்னாட்டு கலாசார அறக்கட்டளையின் 'சிங்கை ஜமாப் ஆட்டம்' என்ற புதிய அறிமுகத்தினை கொங்குநாடு தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ. ஆர் ஈஸ்வரன் துவக்கி வைத்தார். தொடர்ந்து 7 ஆம் ஆண்டு தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

இதில் அறக்கட்டளை நிர்வாகிகள் தலைவர் பழனிச்சாமி, செயலாளர் தனபால், பொருளாளர் பொன்னுச்சாமி, சிங்கை கலை குழுவை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் 54 வது வார்டு பாக்கியம் தனபால், 51 வது வார்டு அம்சவேணி மணிகண்டன், சூலூர் ஒன்றியம் சண்முகப்பிரியா கோபி, தலைமை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி மற்றும் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், கோயில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!