கோவையில் மணல் கொள்ளை, 3 வாகனங்கள் பறிமுதல், அதிகாரிகள் அதிரடி
பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள்
கோவை மாவட்டம் தடாகம் சுற்றுவட்டார பகுதிகளில் அனுமதியின்றி கனிம வளங்கள் அதிகமாக சுரண்டப்படுவதாகவும் இதனால் இயற்கை வளங்கள் பாதிக்கப்படுவதாகவும் எழுந்த புகாரின் அடிப்படையில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து செங்கல்சூளைகளும் மூடப்பட்டது.
இப்பகுதியில் யாரும் மண் எடுக்க கூடாது என்றும் உத்தரவிடப்படுள்ளது. கோஇந்நிலையில் கோவை மாவட்டம் தடாகம் சாலை, காளையனூர், பழனி குட்டை பகுதியில் 2 ஜேசிபி மற்றும் 1 லாரி மண் எடுத்துக் கொண்டிருப்பதாக பெரியநாயக்கன்பாளையம் வடக்கு மண்டல துணை வட்டாட்சியர் சரவணகுமாருக்கு தகவல் கிடைத்ததன
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு மண்டல துணை வட்டாட்சியர், கோவை வடக்கு வட்டாட்சியர், கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியர், வீரபாண்டி கிராம நிர்வாக அலுவலர் குழு சம்பவ இடத்திற்கு சென்றனர்.
அப்போது மண்ணை எடுத்துக் கொண்டிருந்த வாகனங்களின் ஓட்டுநர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் அவர்கள் விவசாயத்திற்காக நிலத்தை சரி செய்வதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில் மூன்று வாகனங்களையும் சிறை பிடித்த அதிகாரிகள் தடாகம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் மண் எடுப்பில் ஈடுபட்ட வாகன ஓட்டுநர்கள் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu