அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: ஆட்சியர் நேரில் ஆய்வு

அரசுபள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி மையம்: ஆட்சியர் நேரில் ஆய்வு
X

கவுண்டம்பாளையம் பகுதியில்செயல்பட்டுவரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டுஆய்வு மேற்கொண்டார்.

கவுண்டம்பாளையம் அரசு பள்ளி மாணவர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்

கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம்செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள், கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவியர்களுக்கான நீட் தேர்வு பயிற்சி மையம் ஆகியவை குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

வெள்ளக்கிணறு கிராமத்தில் 53 ஏக்கர் பரப்பளவில் 1, 006 மனைகள் மேம்பாட்டுத்திட்டம் ரூ. 50 கோடிமதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருவதையும், பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10. 81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ. 152. 87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருவதையும் கலெக்டர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக வீட்டுவசதி வாரிய கோயம்புத்தூர் பிரிவு அலுவலகத்தினை பார்வையிட்ட ஆட்சியர் விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.தொடர்ந்து, வெள்ளக்கிணறு கிராமத்தில் வீட்டு வசதித் துறையின் மூலம் மனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள வீட்டுமனைகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர், அப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பயனாளிகள் தேர்வு குறித்தும், பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினர், குறைந்தவருவாய்ப் பிரிவினர்,

நடுத்தர வருவாய்ப் பிரிவினர், உயர் வருவாய்ப் பிரிவினர் ஆகிய நான்கு பிரிவுகளின் ஒதுக்கீடு செய்யப்படும் வீட்டுமனைப் பிரிவுகளின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.அதனைத்தொடர்ந்து, பெரியநாயக்கன்பாளையத்தில் சுமார் 10. 81 ஏக்கர் பரப்பளவில் பொருளாதாரத்தில் நலிவடைந்தோர் பிரிவுக்காக ரூ. 152. 87 கோடி மதிப்பில் 1800 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்புகள் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்த ஆட்சியர் எஞ்சியுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தினார்.

பின்னர், கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கான நீட் தேர்வு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி நேரில் பார்வையிட்டு, அம்மையத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தினை பரிசோதித்து பார்த்தார்.

இந்த ஆய்வின் போது, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய மேற்பார்வை பொறியாளர் ரவிச்சந்திரன், செயற்பொறியாளர் (சிறப்பு திட்ட கோட்டம் -3) பெரியசாமி, முதன்மை கல்வி அலுவலர் பூபதி உள்பட தமிழ்நாடு வீட்டுவசதிவாரிய அலுவலர்கள்பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!