/* */

'பொருளாதார வளர்ச்சிக்கு தரமான கல்வி நிறுவனங்கள் அவசியம்' - அமைச்சர் பேச்சு..!

ஜனநாயகம் என்பது அனைவருக்குமான சமமான வாய்ப்பு வழங்க வேண்டும். வளர்ச்சி என்பது அனைவருக்குமான சமூக நீதியாக இருக்க வேண்டும்.

HIGHLIGHTS

பொருளாதார வளர்ச்சிக்கு தரமான கல்வி நிறுவனங்கள் அவசியம் - அமைச்சர் பேச்சு..!
X

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

கோவை சிட்ரா அருகில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்கள் கிளையின் புதிய அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் மேடையில் அவர் பேசும் போது,

ஜனநாயக நாட்டின் வளர்ச்சிக்கு சுதந்திர கல்வி நிறுவனங்களின் அவசியம் குறித்து தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது தொழில் நகரமான கோவை, கல்வி, மரியாதை, பண்பில் மேலோங்கிய நகரம் என்றும், இதுபோன்ற கல்வி நிறுவனங்கள் அதற்கு கூடுதல் பலத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

ஜனநாயகம் என்பது அனைவருக்குமான சமமான வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும், வளர்ச்சி என்பது பொருளாதாரம் ரீதியாக மட்டுமின்றி அனைவருக்குமான சமூக நீதியாக இருக்க வேண்டும் என்றும், தரமான கல்வி, ஜனநாயகத்திற்கு வழி வகுக்கிறதா? ஜனநாயகம் தரமான கல்வியை வழங்குகிறதா என்ற விவாதம் இருந்த போது, 1990, 2000 காலக்கட்டத்தில் கல்வியின் தரம் குறைந்ததால் பொருளாதார மந்தநிலை வளர்ந்த நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியதை சுட்டிக்காட்டினார்.

தற்போது அந்த நிலை மாறி தரமான கல்வியே பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமின்றி நீதித்துறை, ஊடகங்கள் எதுவாக இருந்தாலும் ஜனநாயகம் என்பதற்கு இதுபோன்ற சுதந்திர கல்வி நிறுவனங்கள் அவசியமாகிறது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்திய கம்பெனி நிறுவன செயலாளர்களின் ஒரு பிராந்திய அலுவலகமும், 3 கிளை அலுவலகங்களும் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த புதிய அலுவலகம் கோவை மற்றும் சுற்றுவட்டாரத்தில் சி.எஸ்., பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது. இவ்வாறு அவர் பேசினார்.

Updated On: 10 Jan 2024 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிவனை தஞ்சமடைந்தால் வாழ்க்கை ஒளிபெறும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சிலருக்கு வரம்; பலருக்கு சாபமாகும் தனிமை..!
  3. குமாரபாளையம்
    குமாரபாளைத்தில் மழை வேண்டி சிறப்பு யாகம்!
  4. லைஃப்ஸ்டைல்
    உழைப்பில் எறும்பை போல இரு..! உயர்வு தேடி வரும்..!
  5. கோவை மாநகர்
    காவசாகி என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை காப்பாற்றிய அரசு...
  6. லைஃப்ஸ்டைல்
    உலக இயக்கம்கூட உன்னால்தான், பெண்ணே..!
  7. திருப்பரங்குன்றம்
    மதுரை விமான நிலையத்தில், பல லட்சம் பெறுமான தங்கம் மீட்பு
  8. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில், பலத்த மழை: சாலைகளில் மழைநீர்!
  9. குமாரபாளையம்
    10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி மாணவ,...
  10. ஈரோடு
    ஈரோடு மாநகரில் உணவு பாதுகாப்புத் துறையினர் சோதனை: 23 கிலோ அழுகிய...