பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் ; இயன்முறை மருத்துவர் கைது

பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல் ; இயன்முறை மருத்துவர்  கைது
X

அனந்த கிருஷ்ணன்

ஆனந்தகிருஷ்ணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளார்.

கோவை மருதமலை அருகே உள்ள ஐஓபி காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இயன்முறை மருத்துவரான இவர் வன ஆர்வலராகவும் இருந்து வருகிறார். மருதமலை அடிவாரத்தில் பெரிய பங்களா ஒன்றை ஆனந்த கிருஷ்ணன் கட்டி வருகின்றார். கட்டுமான பணிகள் நிறைவடைந்த நிலையில், அந்த வீட்டினை அழகுபடுத்த தேனி மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான பெண் ஆர்கிடெக்கிடம் பணிகளை ஒப்படைத்துள்ளார் . வீட்டை அழகுபடுத்தும் பணிகளுக்காக அந்த ஆர்கிடெக் பெண் வந்த போது, அவரிடம் ஆனந்தகிருஷ்ணன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதுடன், பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளார்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆனந்த கிருஷ்ணனை தொடர்பு கொண்ட பொழுது அவர் தலைமறைவாகி இருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து உதவி ஆணையர் தலைமையில் தனி படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

அவர் மீது கொலை மிரட்டல், முறையற்ற சிலை வைத்தல், காயம் ஏற்படுத்துதல், வன்புணர்ச்சி செய்தல் ஆகிய 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீஸ் விசாரணையில் இயன்முறை மருத்துவர் ஆனந்த கிருஷ்ணன் கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள குமளி என்ற இடத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. தனிப்படை போலீசார் கேரளா சென்று தலைமுறைவாக இருந்த இயன்முறை மருத்துவர் ஆனந்த கிருஷ்ணனை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்த கிருஷ்ணன் கோவை அழைத்தவரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்