கோவை அருகே பொறியாளரின் வீட்டில் 118 சவரன் நகைக் கொள்ளை

கோவை அருகே பொறியாளரின் வீட்டில் 118 சவரன் நகைக் கொள்ளை
X

கொள்ளை நடந்த இடம்

கோவில்பாளையம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் கோவில்பாளயத்தை அடுத்து உள்ளது வழியாம்பாளையம் கிராமம். இங்கு உள்ள இவா என்ற பெயரில் வில்லா குடியிருப்புகள் உள்ளது. இதில் பாலசுப்ரமணியன் என்பவர் தனது மனைவி சுதாவுடன் வசித்து வருகின்றார்.

மென் பொருள் துறையில் பொறியாளராக இருந்த அவர், அந்த துறையில் இருந்து வெளியே வந்து, பொள்ளாச்சி அருகே புரவிபாளையம் பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த 30 ம் தேதி மனைவி சுதாவுடன், பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் பகுதியில் உள்ள தோட்டத்திற்கு வீட்டிற்கு தீபாவளி கொண்டாட சென்று விட்டு இன்று அதிகாலை வழியாம்பாளையத்தில் உள்ள வீட்டுக்கு திரும்பினார்.

அப்பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு, மர பீரோவில் வைக்கப்பட்டிருந்த நெக்லஸ், கம்மல், காசு மாலை, வளையல், மோதிரம், பிரேஸ்லெட், செயின் என 118 சவரன் தங்க நகைகளும் , 75 கேரட் வைர நகைகளும் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது. பாலசுப்ரமணியன் இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். கோவில்பாளையம் காவல் துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர். மேலும் சம்பவ இடத்தில் பதிவாகியுள்ள கைரேகைகள் பதிவு செய்யப்பட்டதுடன், மோப்ப நாய்கள் வர வைக்கப்பட்டு தேடுதல் பணி நடத்தப்பட்டது.

அதே பகுதியில் மயில்சாமி என்பவரது வீட்டிலும் கதவை உடைத்து உள்ளே கொள்ளையர்கள் சென்று இருப்பதும்,அங்கு விலை மதிப்புள்ள பொருட்கள் இல்லாததால் திருட்டு நடைபெறவில்லை என்பதும் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கோவில்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!