கோவையில் வானதிசீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதா ரவி பிரசாரம்

கோவையில் வானதிசீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதா ரவி பிரசாரம்
X
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் ஆதரித்து நடிகர் ராதாரவி பிரச்சாரம் செய்தார்.

காந்திபுரம் 100 ஆடி ரோட்டில் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து நடிகர் ராதாரவி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது :

தான் இங்கு நடிகனாக தான் வந்திருப்பதாகவும், கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன் அவர்கள் போட்டியிடுவதை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்வது தனது கடமைகளில் ஒன்று என்று தெரிவித்தார்.

தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேர்மை அற்றவர் என்றும் தனது தனிப்பட்ட வாழ்விலேயே தன்னை நம்பி வந்த பெண்களை காப்பாற்றாமால் கைவிட்டவர். எப்படி மக்களை காப்பாற்றுவார். வானதி சீனிவாசனின் ஓட்டு வங்கியை பிரிப்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்தின் "பி டீம்" ஆக கமல் ஹாசன் செயல்படுகிறார்.

கம்யூனிஸ்டுகள் 27 கோடி ரூபாய் பணம் பெற்றுக்கொண்டு திமுக கூட்டணியில் இருப்பதாகவும், காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்து பல வருடங்கள் ஆகிவிட்டது என்று விமர்சித்தார்.

சுயமாக சிந்தித்து பேச முடியாமல் பேப்பரில் எழுதி வைத்து அதைப் பார்த்து படிபவர்தான் ஸ்டாலின், வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வி அடையும் இவ்வாறு அவர் பேசினார்.

Tags

Next Story
ai healthcare technology