கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!

கோயிலுக்கு உண்டியலில் சேமித்த பணம்... கொரோனா நிதிக்கு வழங்கிய சிறுவன்!
X
கோவையில், கோயிலுக்கு செல்வதற்காக உண்டியலில் சேர்த்து வைத்திருந்த பணத்தை, கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடையாக வழங்கிய சிறுவனை, பலரும் பாராட்டி வருகின்றனர்.

கோவை கே.கே. புதூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீ என்ற சிறுவன், அப்பகுதி பள்ளியில் ௬ம் வகுப்பு படித்து வருகின்றான். ஸ்ரீ கோயிலுக்கு செல்ல அவ்வப்போது பெற்றோர்கள் தந்த காசை உண்டியலில் சேர்த்து வைத்துள்ளான்.

அவ்வகையில், ஸ்ரீ சேர்த்து வைத்த பணத்தை கோயிலுக்கு தர நினைத்த நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு நிவாரணம் அளிக்கும்படி, தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, சிறுவன் ஸ்ரீ, தான் கோயிலுக்கு செல்ல சேர்த்த உண்டியல் பணம் ரூ.2500-ஐ, தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க முடிவெடுத்தான். அதன்படி, தனது தந்தையின் மூலம் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிவாரண நிதி வழங்கியுள்ளான். அச்சிறுவனை கோவை மாவட்ட ஆட்சியர் நாகராஜன் உள்பட பலரும் பாராட்டினர்.

Tags

Next Story
ai in future agriculture