கோவையில் உலக தாய்மொழி நாள் பேரணி ; தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்பு

கோவையில் உலக தாய்மொழி நாள் பேரணி ; தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பங்கேற்பு
X

கோவையில் உலகத்தாய் மொழி நாள் பேரணி நடந்தது.

World Mother Language Day Rally 25வது உலகத் தாய்மொழி நாள் இன்று உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது.

World Mother Language Day Rally

ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பானது, உல கநாடுகளிலுள்ள அனைத்து தாய் மொழிகளைச் சார்ந்தவர்களும், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 21ஆம் நாளை, உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடுமாறு, 1999 ஆம் ஆண்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதன் அடிப்படையில், 2000ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் 25வது உலகத் தாய்மொழி நாள் இன்று உலகம் முழுவதும் இன்றைய தினம் கொண்டாடப்பட்டது. கோவை மாநகரில் 2009 முதல் உலகத்தாய்மொழிநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 16 வது ஆண்டான இன்று கோவை சித்தாபுதூர் அரசு மகளிர் பல்தொழில் கல்லூரி முன் மாபெரும் பேரணி தொடங்கி, கோவை வ.உ.சி. பூங்காவில் நிறைவு பெற்றது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் சி.சுப்பிரமணியம் அவர்களும் தலைமையேற்று நடத்தினர்.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள், அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவை, தமிழ்க்காப்பு கூட்டியக்கம், தமிழ் இலக்கிய சமுதாய அமைப்புகள், பேராசிரியப் பெருமக்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பேரணியில் கலந்து கொண்டவர்கள் தாய் மொழியே பயிற்று மொழி, தாய் மொழியே ஆட்சி மொழி, தாய் மொழியே நீதிமன்ற மொழி, தாய் மொழியே வழிபாட்டு மொழி என நம் வாழ்வில் அனைத்து நிலையிலும் நம் தாய்மொழியை பயன்பாட்டு மொழியாக்க, நம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவோம் என்று முழக்கமிட்டபடி பேரணியாக சென்றனர்.

Tags

Next Story
டெல்லி டூ அமெரிக்கா அரை மணி நேரத்துலயா? என்னப்பா சொல்ற எலான் மஸ்க்..! | Delhi to America Flight Timings