கோவையில் 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி

கோவையில் 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட தொழிலாளி
X

தற்கொலை செய்து கொண்ட விஜயராகவன்

கோவை சங்கனூரில் 200 அடி ஆழ கிணற்றில் குதித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கோவை சங்கனூர் பகுதியில் வசித்து வந்தவர் விஜய் என்ற விஜயராகவன். இவர் அந்தப் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனிடையே விஜயராகவன் பல வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தின் காரணமாக, உடல் நலம் பாதிக்கப்பட்டு மிகவும் சிரமப்பட்டு வந்ததாக தெரிகிறது. மேலும் அவர் குடும்ப பிரச்சனையின் காரணமாகவும் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்நிலையில் அவர் நேற்று முன்தினம் மாலை நண்பர்களுடன் பேசிக் கொண்டு இருந்த போது சற்று நேரத்தில் வருகிறேன் எனக் கூறிவிட்டு சென்றுள்ளார். பின்னர் பக்கத்தில் உள்ள சண்முகம் என்பவருக்கு சொந்தமான 200 அடி ஆழம் கொண்ட கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து உடனடியாக கவுண்டம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கும் மற்றும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் உயிரற்ற நிலையில் கிடந்த விஜயராகவனின் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். அவரது உடல் கிடைக்காத நிலையில், தொடர்ந்து தேடும் பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக தீயணைப்புத் துறையினர் அவரது உடலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்