காலியாகும் வ.உ.சி. உயிரியல் பூங்கா ; வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட பாம்புகள்

காலியாகும் வ.உ.சி. உயிரியல் பூங்கா ; வனப்பகுதியில் விடுவிக்கப்பட்ட பாம்புகள்
X

Coimbatore News- வ. உ.சி. உயிரியல் பூங்காவில் இருந்து வனப்பகுதியில் விடுவிக்கப்படும் பாம்புகள்.

Coimbatore News- உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லை என கோவை வ.உ.சி பூங்காவிற்கான உரிமத்தை ரத்து செய்ததால் காலி செய்யப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் பாம்புகள் விடப்படுகின்றன.

Coimbatore News, Coimbatore News Today- கோவை காந்திபுரம் அருகே வ.உ.சி. உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. இங்கு ஏராளமான விலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை பராமரிக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில் இந்த உயிரியல் பூங்காவில் போதிய இடவசதி இல்லை என மத்திய வன பாதுகாப்பு ஆணையம் கோவை வ.உ.சி பூங்காவிற்கான உரிமத்தை ரத்து செய்தது. இதனை அடுத்து கடந்த மாதம் இந்த பூங்காவில் இருந்து பெலிக்கான், மர நாய், குரங்கு, பாம்பு, முதலை உள்ளிட்ட உயிரினங்கள் வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

தற்போது கோவையில் உள்ள வ.உ.சி பூங்காவில் இருந்த 10 நாகப்பாம்புகள், 3 கண்ணாடிவிரியன்கள், 4 சாரைப்பாம்புகள் ஆகியவை பெட்டிக்குள் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் அந்த பாம்புகளை சிறுவாணி வனப்பகுதியில் கொண்டு சென்றனர். இந்த பாம்புகள் சிறுவாணி வனப்பகுதியில் விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!