கோவணம் கட்டி திருவோடு ஏந்தி போராட்டம் நடத்திய விசிக நிர்வாகி கைது

மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

கோவணம் கட்டி திருவோடு ஏந்தி போராட்டம் நடத்திய விசிக நிர்வாகி கைது
X

கோவணத்துடன் போராட்டம் நடத்திய சுசி. கலையரசன்

கோவை மாவட்ட ஆதிதிராவிடர் துறை சார்பில் ஆதிதிராவிடர் மக்களுக்கான வீட்டுமனை பட்டா கேட்டு பலமுறை மனு கொடுத்து, விசாரணை முடிந்த பிறகும் பட்டா வழங்காமல் இருப்பதாக கூறி மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அக்கட்சியின் கோவை மண்டல செயலாளர் சுசி.கலையரசன் கோவணம் கட்டி கொண்டும், திருவோடு ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டார். இவருடன் சுமார் 10க்கும் மேற்பட்ட கட்சியினர் கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் கோவையில் அம்பேத்கர் சிலை நிறுவ வேண்டும், பஞ்சமி நிலங்களை மீட்டெடுத்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முன்வைத்தனர்.

இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சுசிகலையரசன், வீட்டுமனை பட்டா வழங்க மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையினர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், இதனை மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். இதன் காரணமாகவே கோவனம் கட்டி, திருவோடு ஏந்தி மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் இந்தப் போராட்டம் மெத்தனமாக செயல்படும் அரசு அதிகாரிகளை கண்டித்து என்றும் கூட்டணிக்கும் போராட்டத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த போராட்டத்தினால் ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Updated On: 12 Feb 2024 10:15 AM GMT

Related News

Latest News

 1. தமிழ்நாடு
  சிறப்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அமைப்பது குறித்து தலைமைச் செயலாளர்...
 2. வீடியோ
  எ.பழனிசாமி ஆட்சியா நடந்துச்சு ? கல்லாப்பெட்டி கம்பெனி நடந்துச்சு !#ttv...
 3. இந்தியா
  செல்போன் இருந்தா..நீங்களும் தேசிய படைப்பாளி விருது வாங்கலாம்..!
 4. லைஃப்ஸ்டைல்
  Funny Food Quotes In Tamil உணவுக்கு முன் பசியுடன் இருப்பதை விட ...
 5. வீடியோ
  EPS-ஐ ஓட ஓட விரட்ட வேண்டும் | தொண்டர்களுக்கு உத்தரவுபோட்ட OPS |...
 6. வீடியோ
  MGR வகுத்த சட்டவிதிகள் ! மாற்றியமைத்த பழனிசாமி !#ops #OPS #OPSspeech...
 7. நாமக்கல்
  ரூ. 57.22 லட்சம் திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய ராஜேஷ்குமார்...
 8. லைஃப்ஸ்டைல்
  Kapam Quotes In Tamil ஆன்மாவின் ஆழத்திலிருந்து எழும் முழக்கமே...
 9. காஞ்சிபுரம்
  ஸ்ரீ புஷ்பவள்ளி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் கோயில்
 10. வீடியோ
  🔴 LIVE | மதுராந்தகம் & செய்யூர் சட்டமன்றத்தில் அண்ணாமலை...